மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த இலக்கை வெறும் 16.3 ஓவர்களில் மும்பை அணி சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதனை சிக்கன் 65யில் 5 இங்க இருக்கு.. மீதயுள்ள 60 எங்க என்று ஒருவர் வடிவேலுவிடம் கேட்பார். அதற்கு வடிவேலு, நண்பரான சரத்குமாரை அழைத்து, "எப்படி சிக்கி இருக்கேன் பாத்தியாப்பா" என்று சொல்லுவார். அதுபோல் ஆர்சிபி பவுலர்களாக மதுர முத்துக்காளையும், கேப்டன் டூ பிளஸிஸாக சரத் குமாரையும், கோலியாக வடிவேலுவையும் மாற்றி, "எப்படி சிக்கி இருந்தேன் பாத்தியாப்பா" என்று கோலி கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

நேற்றையப் போட்டியில் அரைசதம் விளாசிய டூ பிளஸிஸ் மீண்டும் ஆரஞ்ச் கேப்பை வென்றார். இருப்பினும் போட்டியில் தோல்வியடைந்ததால், சோகமாக காணப்பட்டார். இதனை வடசென்னை படத்தில் சந்திராவிடம் சமுத்திரகனி, "உங்கள இப்படி பார்க்க முடியுல அண்ணி.. இந்த பணத்த எடுத்துக்கங்க" என்று சொல்லுவார். அதனை சமுத்திரகனியாக சென்னை அணி ரசிகர்களையும், சந்திராவாக டூ பிளஸிஸையும் மாற்றி, "உன்ன இப்படி பார்க்க முடியலனா.. நம்ம டீம்-க்கு வந்துரு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் குமுறல்.

மும்பை அணியின் இளம் வீரர் நேஹல் வதேரா நேற்றையப் போட்டியில் 34 பந்துகளுக்கு 52 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் படத்தில் அயன் மேன், ஸ்பைடர் மேனை பார்த்து, "ஆல்ரைட்கிட்.. இப்போ நீ ஒரு அவெஞ்சர்" என்று சொல்லுவார். அதுபோல் மும்பை ரசிகர்கள் நேஹல் வதேராவை பாராட்டி வருகின்றனர்.

நேற்றையப் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அதுபோல் ஆர்சிபி அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனை எதிர்நீச்சல் படத்தின் இடைவேளை காட்சியில், சிவகார்த்திகேயனுக்கு ப்ரியா ஆனந்த் தனது குழந்தையை காட்டி, "அங்கிள்-க்கு டாடா சொல்லுங்க" என்று சொல்லுவார். அதுபோல் மும்பை அணி ஆர்சிபியை பார்த்து, "அங்கிள்-க்கு டாடா சொல்லுங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

அண்மையில் நடைபெற்ற விகடன் விருது விழாவில், யார் சிறந்த கமல் ரசிகர்கள் என்று மணிகண்டனும், லோகேஷ் கனகராஜும் சண்டை போட்டனர். அதுபோல் யார் சிறந்த ஸ்கேம்மர் என்று ரோகித் சர்மா மற்றும் ஆர்ச்சர் சண்டை போடுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்ச்சர், "அந்த ஸ்கேம்மர் பட்டம் என்னுடையது.. சாரி ரோகித்.. அதனை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்" என்பது போலவும், அதற்கு ரோகித் சர்மா, "ஒரு ஆர்ச்சர் இல்ல.. நூறு ஆர்ச்சர் வந்தாலும் சட்டைய கிழிச்சுட்டு ஸ்கேம் பண்ணுவேன்.. அந்த இடத்தை விட்டு கொடுக்க மாட்டேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.