For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”ராயல்ஸ் பரம்பரைடா.. சங்கக்காரா சிஸ்யன்டா” ஜெய்ஸ்வாலின் வெறியாட்டம்.. ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!

கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணா விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் வீரர் சாஹல் அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் சாஹல் இதுவரை டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட ஆடியதே இல்லை. இதனை, "நீங்கள் எப்போவாவது சோகத்தில் இருந்தால்.. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர், இன்னும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட ஆடியதில்லை என்பதை" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சாட்டையடி விமர்சனம்.

Stunning memes from social Media after Rajasthan Royals beat Kolkata by 9 wickets in IPL 2023

அதேபோல் 13 பந்துகளில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனை சாமி2 படத்தில் விக்ரம், நான் சாமி இல்ல.. பூதம் என்று சொல்லுவார். அதேபோலான ஒரு கொண்டாட்டத்தை ஜெய்ஸ்வால் வெளிப்படுத்தியதால், சாமி 2 படத்துடன் ஒப்பிட்டு, "நான் ஜெய்ஸ்வால் இல்ல.. பூதம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

அதேபோல் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் பேட்டிங்கால் அபார வெற்றியை பெற்றது. இதனை சார்பட்ட பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸை வீழ்த்திய கபிலனாக ஜெய்ஸ்வாலையும், அவரின் கைகளை பிடித்து பாராட்டும் வாத்தியார் பசுபதியாக பயிற்சியாளர் சங்கக்காராவையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning memes from social Media after Rajasthan Royals beat Kolkata by 9 wickets in IPL 2023

அதேபோல் நேற்றையப் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் விளாச வேண்டும் என்பதற்காக சுயஷ் சர்மா வீசிய ஒய்டு பந்தை சஞ்சு சாம்சன் தடுத்து நிறுத்துவார். அதன்பின்னர் சிக்சர் விளாசி சதத்தை விளாசிவிடு என்று ஜெய்ஸ்வாலுக்கு சஞ்சு சாம்சன் அறிவுறுத்துவார். அதேபோல் ஒரு போட்டியில் வின்னிங் ஷாட்டை கோலி அடிக்க வேண்டும் என்பதற்காக தோனி ரன் சேர்க்காமல் இருப்பார். இரண்டையும் ஒப்பிட்டு தோனியாக சஞ்சு சாம்சனையும், கோலியாக ஜெய்ஸ்வாலையும் மாற்றி உருவாக்கியுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

Stunning memes from social Media after Rajasthan Royals beat Kolkata by 9 wickets in IPL 2023

அதேபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு அறிமுகமாகும் முன் அதிக ரன்களை இளம் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். அதேபோல் நேற்றையப் போட்டியில் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசினார். இதனை லிங்கா படத்தில் ரஜினி, "சி யூ சூன்" என்று சொல்லுவார். அதேபோல் ஜெய்ஸ்வால் இந்திய அணியை பார்த்து, "சி யூ சூன்" என்று கூறுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning memes from social Media after Rajasthan Royals beat Kolkata by 9 wickets in IPL 2023
Story first published: Friday, May 12, 2023, 8:35 [IST]
Other articles published on May 12, 2023
English summary
KKR vs RR: After the fantastic batting from jaiswal, Rajasthan beat Kolkata by 9 wickets. to celebrate this, Fans created fantastic memes in Social Media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+