Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த கேட்சிற்கு எப்படி அவுட் கொடுத்த? 3வது நடுவரை வெளுக்கும் ரசிகர்கள்.. 4வது நாளின் மிரட்டல் மீம்ஸ்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகரக்ள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Stunning Memes from social media after the day 4 of the WTC Final between India - Australia at Oval

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5வது நாளில் இந்திய அணி வெற்றிபெற 280 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் 2003ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் டிராவிட் - ல்க்‌ஷ்மண் கூட்டணி எப்படி ஒருநாள் முழுக்க விளையாடியதோ, அதேபோல் அனைவரும் விராட் கோலி - ரஹானே கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். இதனை தமிழ்ப்படம் சிவா அந்நியன் காட்சியை மாடுகளுக்கு போட்டுக் காட்டுவதை போலவே, ரோகித் சர்மா கொல்கத்தா டெஸ்ட் போட்டியை ஓய்வறையில் போட்டு காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Stunning Memes from social media after the day 4 of the WTC Final between India - Australia at Oval

சுப்மன் கில் கொடுத்த கேட்சை கேமரூன் க்ரீன் பிடித்த போது பாதி பந்து தரையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மூன்றாம் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். அதனை எதிர்நீச்சல் குணசேகரனை மக்கள் அடிக்கும் போல், ரிச்சர்ட் கெட்டில்பரோவை ரசிகர்கள் அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Stunning Memes from social media after the day 4 of the WTC Final between India - Australia at Oval

மங்காத்தா படத்தில் பணம் எங்கிருக்கிறது என்பதை போட்டுக் கொடுக்கும் சுமந்தை அஜித்குமார், பொறம்போக்கு என்று நேரடியாக திட்டுவார். அதேபோல் சுப்மன் கில்லுக்கு அவுட் என்று கொடுத்த மூன்றாம் நடுவர் ரிச்சர்ட் கெட்டிபரோவை ரசிகர்கள் பொறம்போக்கு என்று திட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் ஆவேசம்.

Stunning Memes from social media after the day 4 of the WTC Final between India - Australia at Oval

அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் கொடுத்த கேட்சை கேமரூன் க்ரீன் பிடித்த புகைப்படத்தில் பந்து தரையில் பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து இந்திய வீரர் சுப்மன் கில்லே, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனை எங்கள் அண்ணா படத்தில் செங்கலோடு சிறுவனை துரத்தும் காட்சியை மாற்றி, செங்கலோடு வரும் வடிவேலுவாக சுப்மன் கில்லையும், சிறுவனாக நடுவர் ரிச்சர்டையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning Memes from social media after the day 4 of the WTC Final between India - Australia at Oval

அதேபோல் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் புஜாரா அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்த பின் ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனால் மைதானத்தில் இருந்த சிறுமி ஒருவர் சோகமான முகத்தோடு தனது தந்தையுடன் காணப்பட்டார். ஆனால் விராட் கோலி மற்றும் ரஹானே சிறப்பாக ஆடிய போது, ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த அதே சிறுமி சிரித்த முகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். சிறுமியின் சோகத்தையும், மகிழ்ச்சியையும் வைத்து இந்திய ரசிகர்களின் மனநிலையை வெளிப்படுத்திய மீன் செண்டிமெண்டல் டச்.

Story first published: Sunday, June 11, 2023, 8:09 [IST]
Other articles published on Jun 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+