டெல்லி: 16வது ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனின் சிறப்பான ஆட்டத்தால் 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதனை வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸ்களை பார்க்கலாம்.
குஜராத் அணியின் பந்துவீச்சின் போது தொடக்கத்திலேயே சிறப்பாக பந்துவீசிய ஷமி ப்ரித்வி ஷா மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரையும் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் தொடக்க ஓவர்களில் மட்டும் சுமார் 10 ஒய்டுகளை வீசியதால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக ஏறியது. இதனை குறிப்பிட்டு சிவாஜி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினிகாந்த், "சிவாஜியும் நான்தான்.. எம்ஜிஆரும் நான்தான்" என்று பஞ்ச் டயலாக் பேசி இருப்பார். அதனை அப்படியே ஷமிக்கு பொருத்தி, "ரன் குடுக்குறதும் நான்தான்.. விக்கெட் எடுக்குறதும் நான்தான்" என்று உருவாக்கப்பட்ட மீம் பகீர் ரகம்.

நேற்றையப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி டக் அவுட்டில் பயிற்சியாளர் நெஹ்ரா அருகே ஹர்திக் அமர்ந்திருந்தார். அப்போது ஹர்திக்கிடம் நெஹ்ரா நீண்ட நேரமாக பேசிக் கொண்டே இருந்தார். இதனை காண்போருக்கே அப்படி என்னதான் நெஹ்ரா கூறுகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனை கிண்டல் செய்யும் விதமாக, ஏய் படத்தின் அஞ்சல் நிலைய காட்சியில், வடிவேலு ஒரு வயதானவரிடம் நேதாஜி யார் என்று கேட்பார். அதற்கு அவர், நேதாஜியில் தொடங்கி இங்கிலாந்து வரை பேசுவார். அந்த காட்சியில் வரும் வடிவேலுவை9 ஹர்திக் பாண்டியாவாகவும், வயதானவரை நெஹ்ராவாக வைத்து உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ஃபீல்.

நான்கு ஆண்டுகளுக்கு பின் டெல்லி அணி சொந்த மண்ணில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியது. இதனால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் மைதானத்திற்கு நேரில் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதனை பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கதிர் பேசும் ஒரு பிகில் இல்ல.. 11 பிகில் ஆடப் போறாங்க.. மிஸ் பண்ணுவோமா என்று கேட்பார். காயமடைந்த நிலையிலும் ஆட்டத்தை காண கதிர் வருவார். அதனை அப்படியே ரிஷப் பண்ட் பயிற்சியாளர் பாண்டிங்கிடம் சொல்வது போல், "4 வருஷத்துக்கு அப்றம் சொந்த மண்ணுல ஆடுறோம்.. எப்படி மிஸ் பண்ணுவேன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி ரகம்.

நேற்றையப் போட்டியில் குஜராத் அணியின் பிரதான பந்துவீச்சாளரான ரஷீத் கான் 13வது ஓவரில் தான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். டெத் ஓவரில் ரன்கள் செல்வதை தடுக்க குஜராத் அணி இந்த புதிய யுக்தியை கையாண்டது. இதனை குறிப்பிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியுடன் வரும் சோழர்களை கண்டு பார்த்திபன் கார்த்தியிடம் சொல்லும், "இத்திட்டம் குறித்து தாங்கள் விவரிக்க இல்லையே" என்று சொல்லுவார். இதனை அப்படியே பார்த்திபனாக வார்னரையும், பாண்டியாவாக கார்த்தியையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் ஆச்சரியம் தான்.

இரு நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்கா தேசிய அணிக்காக ஆடிவிட்டு நேற்று முன்தினம் தான் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது அணியுடன் இணைந்தனர். டெல்லி அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் அன்ரிக் நார்கியே உடனடியாக களமிறங்கினார். அதுமட்டுமல்லாமல் தான் வீசிய முதல் பந்திலேயே சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி மிரள வைத்தார். இதனை நானே வருவேன் படத்தில் வரும் வில்லன் தனுஷ் வேட்டையாடுவதற்காக அடைத்து வைத்திருக்கும் சிலரை ரன் என்று சொல்லி வருவார். அதோடு ஒப்பிட்டு அன்ரிக் நார்கியே விக்கெட் வேட்டையாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.