CSK vs RR: "மரண பயத்தை காட்டிட்டான் பரமா" தோனி அடித்த 3 சிக்ஸ்.. சிஎஸ்கே ரசிகர்களின் கெத்து மீம்ஸ்!
சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆனால் கடைசி ஓவரில் 41 வயதிலும் தோனி அடித்த இரு சிக்சர்களை ரசிகர்களை மிரட்சியடைய செய்துள்ளது. இதனை வைத்து ரசிகர்கள் உருவாக்கி வரும் மீம்ஸை பார்க்கலாம்.

கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி - ஜடேஜா இணைந்து 18 ரன்கள் சேர்த்தனர். அதிலும் தோனி அடுத்தடுத்து பந்துகளில் சிக்சர்களை விளாசினார். அதனை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர், சுப்ரமணியபுரம் படத்தில் வரும் ஜெய் பேசும், "சாவு பயத்த காட்டிட்டான் பரமா" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னமாக எப்போதும் சிங்கமே இருக்கும். 41 வயதில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் சிங்கத்திற்கு வயதாகி கிழடாகிவிட்டதாக சிலர் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் கடைசி ஓவரில் தோனி நின்ற போது, ஆட்டம் சிஎஸ்கே கைகளுக்குள் தான் இருப்பது அனைவரும் உணர்ந்தனர். தோனி இரு சிக்சர்களை அடித்த போது, நிச்சயம் சென்னை வெற்றிபெறும் என்று நினைத்தனர். ஆனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், தோனியின் கம்பீரமான புகைப்படத்தை வைத்து, "நீ சிங்கம் தான்" என்று உருவாக்கப்பட்ட மீம் தெறி ஃபீல்.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 ரன்கள் வித்தியாசத்தில் தான் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. குறிப்பாக தோனியின் முயற்சி பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதனை வைத்து, அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ் கதாபாத்திரம் அயர்ன் மேனை பாராட்டும் புகைப்படத்தை மாற்றி, ரசிகர்கள் தோனியை பார்த்து " You Have My Respect.. Dhoni" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் உணர்ச்சிக் குவியல்.

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் ஸ்பின்னர்களான தீக்சனா மற்றும் மொயின் அலி இருவரும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஆனால் ஜடேஜா 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனை விக்ரம் படத்தில் ஜன்னல் வழியாக ஃபகத் ஃபாசில் பயந்துகொண்டே நிற்கும் புகைப்படத்தையும், அச்சமின்றி கமல் நிற்கும் புகைப்படத்தையும் இணைத்து மீம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் கமல்ஹாசனாக ஜடேஜாவும், ஃபகத் ஃபாசிலாக தீக்சனா மற்றும் மொயின் அலியாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.


Click it and Unblock the Notifications