"வெற்றியோ, தோல்வியோ சண்ட செய்யணும்" சரிசமமாக போர் செய்த ஐதராபாத் vs கேகேஆர்.. தெறிக்கும் மீம்ஸ் இதோ!
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்து போராடி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்திற்கு பின் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் பார்க்கலாம்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஹாரி ப்ரூக் 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதில் 12 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதனை அண்ணாத்த படத்தில் வரும் "கொல்கத்தாவுக்கு காப்பு கட்டிட்டேன்" என்று ரஜினிகாந்த் பேசும் வசனத்தை ஹாரி ப்ரூக் பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

16 ஐபிஎல் சீசன்களில் இதுவரை கொல்கத்தா அணிக்கு எதிராக 11 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசியுள்ளனர். ஆனால் கொல்கத்தா அணி தரப்பில் ஒரேயொரு வீரர் மட்டுமே சதம் விளாசியுள்ளார். அதுவும் 2008ம் ஆண்டு தொடக்க போட்டியில் மெக்கல்லம் அடித்த சதமாகும். இதனை தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமை "அப்போ சொன்ன நிலாவா?" என்று சந்தானம் கிண்டல் செய்வார். அதனை மாற்றி, "2008ல அடிச்ச அந்த மெக்கல்லம் சதம் மட்டும் தானா?" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் மயங்க் மார்க்கண்டே 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார். இவர் மும்பை அணிக்காக ஆடியவர். ராகுல் சஹருக்கு முன் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தற்போது ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் பந்துவீச்சு கொடூரமாக உள்ள நிலையில், மார்க்கண்டே பந்துவீச்சால் மும்பை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இதனை சென்னை - 28 படத்தில் வரும் கோபி, பெட் மேட்ச்சில் தோல்வியடைந்ததால் தனது பேட்டை இழக்கும் போது அழுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அதிரடி.

நேற்றையப் போட்டியில் கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். இவர் இருக்கும் வரை ஆட்டம் யார் பக்கம் என்பது முடிவாகாமலேயே இருந்தது. இந்த நிலையில் கேகேஆர் முன்னாள் கேப்டன் கம்பீர் உடன் ராணாவை ஒப்பிட்டு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் படத்தில் வரும் நாசர் கதாபாத்திரம் ராணாவிடம், போராடுவதிலும் அதே கோச்சடையான் குணம் உனக்கு ராணா என்று சொல்வது போலும், அதற்கு ராணா, அதே டெல்லி ரத்தம்.. அப்படி தான் இருக்கும் என்று பதில் சொல்வது போலும் உருவாக்கப்பட்ட மீம் கூல்பம்ப்.

நேற்றையப் போட்டியில் ஐதராபாத் அணி 228 ரன்கள் குவித்த நிலையில், கொல்கத்தா அணியும் மனம் தளராமல் 205 குவித்தது. இதனை வடசென்னை படத்தில் தனுஷ் பேசும், "வெற்றியோ தோல்வியோ சண்ட செய்யணும்" என்று வசனத்தை கொல்கத்தா அணி பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் சரவெடி.


Click it and Unblock the Notifications