Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RR: ”போர்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்” கடைசிவரை போராடிய தோனி.. ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆனால் கடைசி ஓவரில் 41 வயதிலும் தோனி அடித்த இரு சிக்சர்கள் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்தப் போட்டியை வைத்து ரசிகர்கள் உருவாக்கி வரும் மீம்ஸை பார்க்கலாம்.

Stunning Memes of Rajasthan beats Chennai by 3 Runs in Chepauk at IPL 2023

சென்னை அணி வெற்றிபெற 17 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையை தோனி - ஜடேஜா இணை உருவாக்கியது. சாத்தியப்படாத ஒரு ஆட்டத்தை கிட்டத்தட்ட முடிக்கும் நிலைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கடைசி பந்தில் வெற்றி கை நழுவியது. இதனை வைத்து விக்ரம் படத்தில் வரும் வயதான கமான்டராக, ஒற்றை ஆளாக போராடும் கமல்ஹாசனாக தோனியையும், அவரை பார்த்து மிரண்டு போகும் ஃபகத் ஃபாசிலாக ரசிகர்களையும் உருவாக்கிய மீம், Once upon a time there lived a Ghost Moment.

Stunning Memes of Rajasthan beats Chennai by 3 Runs in Chepauk at IPL 2023

கடைசி ஒரு 5 பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்தப் பந்தை எந்த சலனமுமின்றி சந்தீப் சர்மா சிறந்த யார்க்கராக வீசினார். அதனை திருப்பாச்சி படத்தில் வரும் விஜய், எதிரிகளை பார்க்காமலே குறி வைத்து ஈட்டியை வீசி கொல்லும் காட்சியை இடம்பெற்றிருக்கும். அப்போது விஜய் பேசும், "குறினா இப்படி இருக்கனும்" என்ற வசனத்தை சந்தீப் சர்மாவுக்கு மாற்றி "accuracyனா இப்படி இருக்கனும்" என்று உருவாக்கப்பட்ட மீம் மாஸ்.

Stunning Memes of Rajasthan beats Chennai by 3 Runs in Chepauk at IPL 2023

நேற்றையப் போட்டியிலும் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியாக 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை கலகலப்பு படத்தில் சந்தானம், "Murder பன்றதுலாம் எனக்கு பவுடர் அடிக்கிறது மாதிரி" என்று பேசி இருப்பார். அதனை மாற்றி, "எனக்கு அரைசதம் அடிக்கிறதெல்லாம் பவுடர் அடிக்கிற மாதிரி" என்று பட்லர் பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

Stunning Memes of Rajasthan beats Chennai by 3 Runs in Chepauk at IPL 2023

அஸ்வின் வீசிய பந்தில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே இறங்கி வந்து அடிக்க முயற்சித்திருப்பார். ஆனால் கால்களை நகர்த்துவது போல் தெரிந்திருந்தாலும், கிரீஸில் இருந்து கால்கள் நகர்ந்திருக்காது. இருந்தும் ஸ்டம்பிங் செய்த சஞ்சு சாம்சன், நடுவரிடம் அவுட் அப்பீல் கேட்பார். மூன்றாம் நடுவரிடம் இருந்து நாட் அவுட் என்று தீர்ப்பு வரும். கிட்டத்தட்ட 2 அடி தூரம் கால்களை ஷிவம் துபே நீட்டி இருப்பார். ஏற்கனவே ஷிவம் துபே மீது கால்களை நகர்த்தாமல் ஷாட்களை விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை கிண்டல் செய்யும் வகையில், சும்மாவே அவன் கால நகர்த்த மாட்டான் என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ரகம்.

Stunning Memes of Rajasthan beats Chennai by 3 Runs in Chepauk at IPL 2023

சென்னை அணியின் கேப்டன் தோனியை, ராஜஸ்தான் அணியின் போல்ட் பந்துவீச்சை டெத் ஓவர்களில் விளாசி தள்ளுவார். இதுவரை டெத் ஓவரில் போல்ட் வீசிய 44 பந்துகளில் மட்டும் தோனி 84 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் நேற்றையப் போட்டியில் காயம் காரணமாக போல்ட் விளையாடவில்லை. ஒருவேளை போல்ட் இருந்திருந்தால் தோனி, ஆட்டத்தை வென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில் ஆம்பள படத்தில் தீவிரவாதி ஒருவர் சந்தானத்திடம், "இந்த முற நீ இல்லாம போய்ட்டியே தலைவா" என்று பேசி இருப்பார். அதனை தோனி, போல்ட்டை பார்த்து பேசுவது போல், "டெத்-ல நீ இல்லாம போய்ட்டியே தலைவா" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க லெவல்.

Story first published: Thursday, April 13, 2023, 7:53 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+