தூக்கம் வருது சாரே.. வார்னருக்கு கம்பெனி கொடுக்கும் ஐதராபாத்.. ரசிகர்களின் அசத்தல் மீம்ஸ் இதோ!
லக்னோ: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ஓவரில் இலக்கை எட்டி அசத்தியது. இந்தப் போட்டியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ரசிகர்களின் மீம்ஸ் பார்க்கலாம்.

நேற்றையப் போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டனாக முதல்முறையாக எய்டன் மார்க்ரம் களமிறங்கினர். நடப்பு ஐபிஎல் தொடரில் டாஸ் வென்ற அனைத்து அணிகளும் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், நேற்று டாஸ் வென்ற மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை சிங்கம் படத்தில் சூர்யா, "எதிர்பார்க்கலல.. திருப்பி அடிப்பேன்னு எதிர்பார்க்கலல.. தனியா நின்னு தட்டுவேன்னு எதிர்பார்க்கலல" என்று பஞ்ச் டயலாக் பேசி இருப்பார். அதோடு மார்க்ரம் பேட்டிங் தேர்வு செய்ததை ஒப்பிட்டு, "எதிர்பார்க்கலல.. டாஸ் வின் பண்ணி பேட்டிங் தேர்வு செய்வேன்னு எதிர்பார்க்கலல" என்று உருவாக்கப்பட்ட மீம் மாஸ் இண்ட்ரோ.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 121 ரன்கள் சேர்த்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளும் சரிந்ததால், ஆட்டம் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. கிட்டத்தட்ட பலரும் ஐதராபாத் பேட்டிங்கின் போது தூங்கியே விட்டனர். இதனை கட்சி கூட்டத்தில் விஜயகாந்த் தூங்குவது போல் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, ஐதராபாத் பேட்டிங் தூக்கம் வருவதாக உருவாக்கப்பட்ட மீம் பக்கா டிரால் மெட்டீரியல்.

ஐதராபாத் அணி 122 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்த நிலையில், லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி விரைந்து ஆட்டத்தை முடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனை வைத்து படையப்பா படத்தில் ரஜினி சண்டைக்கு செல்லும் போது, தாய் லட்சுமி தரப்பில், "படையப்பா.. ரொம்ப நேரம் எடுத்துக்காத.. சீக்கிரமா முடிச்சுட்டு வா" என்று அறிவுரை கூறுவார். அதுபோல் நடிகை லட்சுமியாக லக்னோ அணியும், படையப்பா ரஜினியாக கைல் மேயர்ஸ்-யும் வைத்து, "டைம் எடுத்துக்காத.. சீக்கிரமா முடிச்சுட்டு வா" என்று உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் தனது இரண்டாவது ஓவரை வீசும் போது, முதல் பந்தில் சிக்சர் அடித்திருப்பார் தீபக் ஹூடா. இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே வீழ்த்தி புவனேஷ்வர் குமார் பதிலடி கொடுப்பார். அதிலும் பந்துவீசிவிட்டு ஒற்றைக் கையில் அவரே கேட்ச் பிடித்து அசத்தி இருப்பார். இதனை பேட்ட படத்தில் ரஜினி, திடீரென ஆற்றங்கரையில் நின்று டக் டக்கென துப்பாக்கி சுடும் காட்சி மரண மாஸாக இருக்கும். அதனை தூரத்தில் இருந்து பார்த்து உடன் வந்தவர், "சாரே கொல மாஸு" என்று சொல்லி இருப்பார். இதனை வைத்து புவனேஷ்வர் குமார் கேட்ச் பிடித்ததற்காக உருவாக்கப்பட்ட மீம் கொல மாஸ்.

அதேபோல் 2 ஐபிஎல் சீசன்களுக்கு முன் டேவிட் வார்னர் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். சில போட்டிகளில் சொதப்பியதால், நீண்ட காலமாக அணிக்காக கேப்டன்சி செய்து வந்தவரை, ஐதராபாத் நிர்வாகம் தூக்கி எறிந்தது. தற்போது டெல்லி அணியின் கேப்டனாக வார்னர் விளையாடி வருகிறார். அந்த அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் ஐதராபாத் அணியின் இரு போட்டிகளில் தோல்வியடைந்ததால், கடைசி இடம் ஐதராபாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஜில்லா படத்தில் விஜய் தனது அப்பாவான மோகன் லாலிடம், "பாசக்கார அப்பா.. இன்னும் பாஸ்வேர்ட் கூட என் பேர்லயே வச்சுருக்க" என்று பேசி இருப்பார். அது போல் வார்னர் ஐதராபாத் அணியிடம், "பாசக்கார மாஜி பிரான்சைஸ்... எனக்கு கம்பெனி கொடுக்குறீங்க" என்று பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் நக்கல் ரகம்.


Click it and Unblock the Notifications