Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அத்திம்பேர் நிம்மதியா தூங்குங்க" ராஜஸ்தானை முடித்துக்கட்டிய படிக்கல்.. ரசிகர்களின் தெறி மீம்ஸ் இதோ!

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுகாத்தியில் முதல்முறையாக ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது. இதனை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் பற்றி பார்க்கலாம்.

 Stunning Memes of Social Media after Punjab beats Rajasthan by IPL 2023

நடிகை சிம்ரன் ஏப்ரல் 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதியான நேற்று பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களும், சிம்ரான் ஹெட்மயர் 18 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். இப்படி சிம்ரன் ஹெட்மயர் என்று பெயர் கொண்ட இரு வீரர்களும் நடிகை சிம்ரன் பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்கும் வகையில் விளையாடினர். இதனை வைத்து லண்டன் படத்தில் வரும் மும்தாஜின் செயினை எடுக்கும் நளினி வடிவேலுவிடம், "ஓ.. என் பர்த்டே-க்கு கிப்ட் வாங்கி வச்சுருக்கேனு சொல்லுவியே.. அதுதான் இதுவா" என்று கேட்பார். அதுபோல், "சிம்ரன், ஓ.. என் பர்த்டே-க்கு கிப்ட்-டா" என்று உருவாக்கப்பட்ட மீம் அபூர்வ ஒப்பீடு.

 Stunning Memes of Social Media after Punjab beats Rajasthan by IPL 2023

ராஜஸ்தான் அணி வீரர் அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்பாக எதிர்முனையில் நின்றிருக்கும் ஷிகர் தவான் கிரீஸில் இருந்து வெளி வருவார். இதனை பார்த்த பின் திடீரென அஸ்வின் பந்துவீசுவதை நிறுத்திவிடுவார். மன்கட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்சரிக்கை மட்டுமே கொடுத்திருப்பார். அப்போது கேமரா அனைத்தும் பட்லர் பக்கம் திரும்பும். இதனை வைத்து, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் சத்யன், "என்னைய எதுக்கு பாக்குறீங்க.. எனக்கு எதுவும் தெரியாது" என்ற வசனத்தை பேசி இருப்பார். இதனை பட்லர், "என்ன எதுக்குபா காட்டுறீங்க.. நாங்க இப்போ டீம் மேட்ஸ்" என்று சொல்லுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க ஃபீல். இருவரும் எதிர் எதிர் அணிகளில் ஆடிய போது அஸ்வின் பட்லரை ஒருமுறை மன்கட் செய்திருந்தார்.

 Stunning Memes of Social Media after Punjab beats Rajasthan by IPL 2023

ராஜஸ்தான் அணிக்காக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய இளம் வீரர் துருவ் ஜுரேல் 15 பந்துகளில் 32 ரன்களை விளாசி இருப்பார். அர்ஷ்தீப் சிங் வீசிய முக்கிய ஓவரில் 16 ரன்கள் விளாசுவார். இதனை பாராட்டும் வகையில், திருப்பாச்சி படத்தில் நடிகர் விஜய் பேசும், "குறினா இப்படி இருக்கனும்டா" என்று வசனம் பேசியிருப்பார். அதனை அப்படியே மாற்றி, " இம்பேக்ட் பிளேயர்னா இப்படி இருக்கனும்" என்று உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனத்தின் உச்சம்.

 Stunning Memes of Social Media after Punjab beats Rajasthan by IPL 2023

ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் முதல்முறையாக நேற்றைய போட்டியை சொந்த மண்ணில் விளையாடினார். இதனால் அவரது ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கின் போது ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்தில் இருந்தது. இதனிடையே பேட்டிங்கின் போது ரியான் பராக் 98 மீ தூரன் சிக்சர் விளாசுவார். அப்போது ரியான் பராகிற்காக வைத்திருந்த போஸ்டர்கள் காட்டப்படும். அதனை சிங்கம் படத்தில் சூர்யா பிரகாஷ் ராஜிடம் பேசும், "சொந்த ஊர்க்காரன்-வே" என்ற வசனத்தை ரியான் பராக் பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் மாஸ் ஃபீல்.

 Stunning Memes of Social Media after Punjab beats Rajasthan by IPL 2023

ராஜஸ்தான் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் மீது பிரஷர் ஏறாவும் காரணமாக அமைந்தார். ராஜஸ்தான் தோல்விக்கு படிக்கல் முக்கிய காரணமாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் படிக்கலை கிண்டல் செய்யும் வகையில், A1 படத்தில் வரும் விஏஓ கதாபாத்திரம் இறந்து படித்திருக்கும் போது லொள்ளு சபா சேஷு, "அத்திம்பேர் நிம்மதியா தூங்குங்க அத்திம்பேட்" என்று பேசி இருப்பார்.இதனை அப்படியே இறந்து படுக்க வைத்திருக்கும் விஏஓ ராஜஸ்தான் அணியாகவும், லொள்ளு சபா சேஷு படிக்கல்லை போலவும் உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Story first published: Thursday, April 6, 2023, 7:36 [IST]
Other articles published on Apr 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+