பவுலிங்கில் ஸ்டிராங்க்..... பேட்டிங்தான் கொஞ்சம் வீக்..... ஹைதராபாத்தின் பலம்!
Recommended Video

சென்னை: ஐபிஎல் சீசன் 11 பைனல்ஸில் விளையாட உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் மிகவும் வலுவான பவுலிங் அணியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பைனல்ஸில் இது எடுபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் சீசன் 11ன் பைன்ல்ஸ் மும்பையில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. இந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிரண்டு இடங்களில் இருந்ததுடன், முதல் முதலாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்.
இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் 688 ரன்களுடன் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்சன், அதிக ரன் குவித்தோரில் முதலிடத்தில் உள்ளார். இந்த சீசனில் ஆரஞ்ச் கேப் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது.
அவரைத் தவிர, ஷிகார் தவான், மனிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான் ஆகியோரும் பேட்டிங்கில் கலக்குகின்றனர். இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரஷீத் கான், நானும் அடித்து விளையாடுவேன் என்பதை காட்டியுள்ளார்.

யாருக்கு பர்பிள் கேப்
அதே நேரத்தில் பவுலிங்கில் மிகவும் வலுவானதாக ஹைதராபாத் உள்ளது. ரஷீத் கான் மற்றும் சித்தார்த் கவுல் தலா 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். பஞ்சாபின் ஆந்தரூ டை 24 விக்கெட்களுடன் பர்பிள் கேப் பெறுவதற்கு தயாராக உள்ளார். பர்பிள் கேப் வெல்வதற்கு ரஷீத் கான் மற்றும் சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு உள்ளது.

மிரட்டும் வீரர்கள்
புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா அசத்தல் பவுலிங் செய்து வருகின்றனர். ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், கார்லோஸ் பிராத்வொயிட் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுலிங்கும் ஸ்டிராங்காக உள்ளனர்.

கலக்கிய ஹைதராபாத்
ஹைதராபாத் இந்த சீசனில் முதல் 11 ஆட்டங்களில் 9 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. ராஜஸ்தானிடம் 9 விக்கெட்களில் வெற்றி, மும்பையிடம் 1 விக்கெட்டில் வெற்றி, கொல்கத்தாவிடம் 5 விக்கெட்டில் வெற்றி, பஞ்சாபிடம் 15 ரன்களில் தோல்வி, சிஎஸ்கேவிடம் 4 ரன்களில் தோல்வி, மும்பையிடம் 31 ரன்களில் வெற்றி, பஞ்சாபிடம் 13 ரன்களில் வெற்றி, ராஜஸ்தானிடம் 11 ரன்களில் வெற்றி, டெல்லியிடம் 7 விக்கெட்களில் வெற்றி, பெங்களூரிடம் 5 ரன்களில் வெற்றி, டெல்லியிடம் 9 விக்கெட்களில் வெற்றி என கிட்டத்தட்ட பவுலிங்கால் ஹைதராபாத் பெரும்பாலான ஆட்டங்களில் வென்றது.

நிலைமை மாறியது.
பிளே ஆப் சுற்றுக்கு முதல் ஆளாக நுழைந்த நிலையில், ஹைதராபாத் நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்தது. லீக் சுற்றில் சிஎஸ்கேவிடம் 8 விக்கெட்களில் தோல்வி, பெங்களூரிடம் 14 ரன்களில் தோல்வி, கொல்கத்தாவிடம் 5 விக்கெட்களில் தோல்வி, முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 2 விக்கெட்களில் தோல்வி அடைந்தது. இரண்டாவது தகுதிச் சுற்றில் கொல்கத்தாவிடம் 14 ரன்களில் வெற்றி பெற்று பைனல்ஸ் நுழைந்துள்ளது. சிஎஸ்கேவிடம் இந்த சீசனில் மூன்று முறை தோல்வியடைந்துள்ள ஹைதராபாத், பைனல்ஸில் அதை மாற்றி அமைக்குமா, அதன் பவுலிங் எடுபடுமா என்பது நாளை இரவு தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications