ரோகித் கேப்டன்சிக்கு முக்கிய கண்டம்.. அந்த 2 விஷயம் தான் எல்லாமே.. கடும் எச்சரிக்கை விடும் கவாஸ்கர்
மும்பை: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிரே காத்திருக்கும் முக்கிய கண்டம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவரின் கம்பேக் சிறப்பாக இருந்தது.

ரோகித்தின் கேப்டன்சி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வைட் வாஷ் செய்தது, அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் மற்றும் டி20 தொடர் என இரண்டிலும் வைட் வாஷ் செய்தது ரோகித்தின் கேப்டன்சி கணக்கை தொடங்கி வைத்துள்ளது. எனினும் அவர் இன்னும் டெஸ்ட் அணியை வழிநடத்தவில்லை. மேலும் அயல்நாடுகளிலும் இன்னும் பெரியளவில் கேப்டன்சி செய்யவில்லை.

எச்சரிக்கும் கவாஸ்கர்
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே ரோகித்திற்கு கண்டம் உள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேவையான ஒவ்வொரு வீரரையும் தற்போதே தேர்ந்தெடுத்து அதிகப்படியான போட்டிகளில் ஆட வைத்து தயார் படுத்த வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு அதிக போட்டிகளில் ஆடினாலும் அவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை இரண்டுமே சரியாகவே இருக்க வேண்டும். இது மிகப்பெரிய சவால் ஆகும்.

போட்டி அட்டவணைகள்
இந்திய வீரர்களுக்கு அடுத்ததாக இலங்கை தொடர், 2 மாதங்கள் ஐபிஎல், தென்னாப்பிரிக்காவுடன் 5 டி20, இங்கிலாந்துடன் டி20 மற்றும் டெஸ்ட் என தொடர்ந்து போட்டிகள் உள்ளன. இத்தனை போட்டிகளை வீரர்களை ஆட வைக்க வேண்டும். விளையாடிய பின்பும் வீரர்கள் அதே உடற்தகுதியுடனும், மனவலிமையுடனும் இருக்க வேண்டும். இதுதான் ரோகித்தின் கேப்டன்சியில் உள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது எனக்கூறியுள்ளார்.
Recommended Video

ரோகித் போட்ட திட்டம்
தற்போதைய சூழ்நிலைகளை வைத்து பார்த்தால் ரோகித் சர்மா ஒரு இளம் படையுடன் டி20 உலகக்கோப்பையை எதிர்கொள்ள திட்டமிடுகிறார் என்று தான் தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக தான் சமீப காலமாக அணியில் இளம் வீரர்களின் செயல்பாடுகள் அதிகம் தெரிகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட 15 வீரர்களை ரோகித் நம்பியிருக்க வேண்டியது இருக்காது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications