Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின்,டிராவிட்டுக்கு பிசிசிஐயில் முக்கிய பொறுப்பு.. நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது-கவாஸ்கர் கருத்து

மும்பை: பிசிசிஐ முன்னாள் வீரர்களின் அனுபவத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விவகாரங்களை கையாள்வதற்கு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் அதிகார வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டும் சிஏசி குழுவின் பணி நின்றுவிடக் கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளின் அட்டவணையைத் தீர்மானிப்பது மற்றும் இந்திய கிரிக்கெட் சார்ந்த பிற முக்கிய விவகாரங்களை நிர்வகிப்பது போன்ற கூடுதல் பொறுப்புகள் இந்த ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Gavaskar on sachin

இது குறித்து பேசிய கவாஸ்கர், "தற்போது பிசிசிஐயில் தேர்வுக் குழுக்கள் மற்றும் சிஏசி தவிர வேறு எந்தக் குழுக்களும் செயல்படுவதாகத் தெரியவில்லை. தேர்வாளர்களையும் பயிற்சியாளரையும் தேர்ந்தெடுக்கும் வரம்பைக் கடந்து, சிஏசி-யின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டி அட்டவணைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இக்குழு ஆராய வேண்டும். இந்தத் தகுதியான குழுவில் இடம்பெறக்கூடிய அளப்பரிய அனுபவம் வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் நம்மிடம் உள்ளனர்."

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்சனா நாயக் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டில்தான் சிஏசி உறுப்பினர்கள் கடைசியாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு வழக்கமாக முதன்மைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மட்டுமே பிரதானமாக ஈடுபட்டு வந்துள்ளது.

"சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக் போன்ற பெயர்களைப் பரிசீலித்தால் என்ன? இவர்களோடு பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரும் இக்குழுவில் இருப்பார்கள். இதை நினைத்துப் பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது. இது எப்போதாவது நனவாகுமா, அல்லது வெறும் கனவாகவே கலைந்துவிடுமா?" என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

IND vs AFG: வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் காயம்.. தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு

Also Read

IND vs AFG: வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் காயம்.. தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு

இத்தகைய அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ஆகியோருடன் ஆலோசிக்கும்போது அதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்தார். மேலும், மகளிர் கிரிக்கெட்டுக்கு என்று தனியாக ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்குவது குறித்தும் அவர் தனது யோசனையை முன்வைத்துள்ளார்.

Story first published: Monday, September 14, 2026, 21:13 [IST]
Other articles published on Sep 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+