கோலியை பார்த்து கத்துக்கோங்க.. இப்படியா ஆட்டமிழப்பது? கில்லை வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர்
புனே : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடர்ந்து நான்கு போட்டிகளை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இந்திய அணி 8 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 257 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 51 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றது.

இந்த நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மா 48 ரன்களும் கில் 52 ரன்களிலும் ஆட்டம் இழக்க நடுவரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் 19 ரன்களில் வெளியேறினார்.இந்த நிலையில் ஆட்டம் ஸ்ரேயாஸ்,கில் ஆட்டம் இழந்த முறைக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடும் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கடி பொறுமையை இழந்து வருகிறார். 19 ரன்னில் தன்னுடைய விக்கெட்டை அவர் தூக்கி போட்டு சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதேபோன்று அரை சதம் அடித்த நிலையில் தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.இந்த இடத்தில் தான் இந்த இரு வீரர்களும் தவறு செய்கிறார்கள். விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இந்த தவறை செய்யவே மாட்டார். விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை அவ்வளவு எளிதாக பறி கொடுக்க மாட்டார். அவருடைய விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றால் பவுலர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இதை தான் இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். விராட் கோலி எப்போதுமே 70 ரன்கள் தொட்டுவிட்டால் அதனை சதமாக மாற்றும் முயற்சி எடுப்பார். அதை ஏன் நீங்கள் செய்ய கூடாது. சதம் என்பது உங்களுக்கு அனைத்து நாளும் கிடைக்காது. உங்களுக்கு சதம் எப்படி கிடைக்கும் என்று தெரியும் இதனால் ஸ்ரேயாஸ் ஐயரும், கில்லும் குறைந்தபட்சம் சதம் அடிக்க முயற்சி செய்யுங்கள்.
ஸ்ரேயாஸ் ஐயர் நடு வரிசையில் களமிறங்குவதால் அவருக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் பல் இல்லாத வேகப்பந்து வீச்சுக்கே நீங்கள் விக்கெட்டுகளை எளிதாக இழக்கிறீர்கள் என்றால் பலமான வேகப்பந்து எதிர்கொண்டால் என்ன ஆகும் என்பதை பாருங்கள். இன்றைய ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இதனால் இந்த தவறு வெளியே தெரியாது. ஆனால் பலமான அணியை எதிர்கொள்ளும் போது விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications