Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா WTC Final-க்கு தகுதி பெறுவது கடினம்! புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! கவாஸ்கர் கருத்து

மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தற்போது ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கும் நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் கவாஸ்கர் தொடரை சமன் செய்ய முடியும். இல்லை என்றால் ஆஸ்திரேலியா போட்டியை டிரா செய்தாலே தொடரை வென்று விடும்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ரோகித் சிட்னி டெஸ்ட் போட்டியில் ரன் சேர்க்க முடியவில்லை என்றால் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விடுவார் என தெரிவித்துள்ளார்.

ind vs aus virat kohli rohit sharma melbourne

இது குறித்து பேசிய அவர், சிட்டி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்பு இன்றைய தோல்வியின் மூலம் மிகவும் கடினமாக மாறிவிட்டது. எனவே அடுத்த சைக்கிள் இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

2027 ஆம் ஆண்டு இனி பைனல் நடக்கும். எனவே இந்திய அணியில் புதுமுக வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்கான முடிவை தேர்வு குழுவினர் எடுக்க வேண்டும். தேர்வு குழுவினர் எதிர்பார்த்தபடி சீனியர்கள் செயல்படவில்லை. ரன்கள் குவிக்க வேண்டியது டாப் ஆர்டர்களின் கடமையாகும். அவர்கள் அதை செய்யவில்லை என்றால் கீழ் வரிசையில் உள்ள வீரர்களை குறை சொல்வது என்பது மிகவும் தவறு.

சீனியர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடுவதில்லை. ஐந்தாவது நாள் முழுவதும் பேட்டிங் செய்திருந்தாலே, இந்திய அணி டிரா செய்து இருக்கும். ஆனால் இந்தியா தோல்விக்கான வழியை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஜெய்ஸ்வாலும், ரிஷப் பண்டும் விளையாடியதை பார்த்து இந்திய அணி டிரா செய்யும் தான் அனைவரும் நினைத்தார்கள். இன்னும் ஒரு மணி நேரம் விக்கெட் கொடுக்காமல் விளையாடி கொண்டிருந்தால், கூட ஆஸ்திரேலியா அணி போட்டியை டிரா செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 31, 2024, 9:08 [IST]
Other articles published on Dec 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+