Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் குறித்து ஏன் வாய் திறக்க மாட்றீங்க? விராட் கோலிக்காக களத்தில் குதித்த கவாஸ்கர்..சரமாரி கேள்வி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக கவாஸ்கர் களத்தில் குதித்துள்ளார்.

Recommended Video

Indian Team-க்கு Virat Kohli பாரமாகிவிட்டாரா? *VOX

விராட் கோலியின் ஆட்டம் டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் இல்லை. அவரது ஸ்ட்ரைக் ரேட் அடி பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விராட் கோலியை விட சிறப்பாக விளையாடி வரும் தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்த நிலையில், விராட் கோலியை ஏன் இன்னும் டி20 அணியிலிருந்து நீக்காமல் இருக்கிறீர்கள் என்று கபில்தேவ் விமர்சனம் செய்தார். இதே போன்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், முன்பு எல்லாம் கங்குலி, சேவாக் போன்றோரோ பார்மில் இல்லாத போது நீக்கப்பட்டனர். ஆனால் இப்போது அப்படி நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

கவாஸ்கர் கேள்வி

கவாஸ்கர் கேள்வி

இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரோகித் சர்மா எத்தனையோ முறை ரன் அடிக்காமல் இருந்து இருக்கிறார். அப்போது எல்லாம் யாராவது அவரை அணியை விட்டு நீக்க சொன்னீர்களா. விராட் கோலியை மட்டும் ஏன் போக சொல்கிறீர்கள்.

தற்காலிகமானது

தற்காலிகமானது

ஃபார்ம் எப்போதும் தற்காலிகமானது தான். ஆனால் தரம் நிலையானது. விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்து தான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடும் போது சில சமயம் அது கைக் கொடுக்கும், சில சமயம் கை கொடுக்காது இதை எல்லாம் தேர்வுக்குழு கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்.

கவாஸ்கர் நம்பிக்கை

கவாஸ்கர் நம்பிக்கை

டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இன்னும் நிறைய போட்டியில் இந்தியா விளையாடும். அதற்குள் விராட் கோலி பார்ம்க்கு திரும்பிவிடுவார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதே போன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தீஸ்குப்தா பேசும் போது விராட் கோலி ஃபார்ம்க்கு திரும்ப ஒரு போட்டி போதும் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, July 12, 2022, 13:43 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+