Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி பயிற்சியாளராக தோனி.. கவாஸ்கர் கொடுத்த ஐடியா.. ஆனால் இது மட்டும் செய்யுங்க என அறிவுரை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தோனி வரவேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.

எனினும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் தோனி இளம் வீரர்களுக்கு தன்னுடைய கிரிக்கெட் அறிவை கடத்தி வருகிறார். போட்டி முடிந்ததும் பலரும் தோனியிடம் பத்தாம் வகுப்பு மாணவன் டியூஷன் செல்வது போல் கிரிக்கெட் வீரர்கள் சென்று தங்களுடைய சந்தேகங்களை கேட்டு வருகிறார்கள் .

sunil gavaskar feels dhoni should take coaching role after 3 years cooling off period

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தோனி பணியில் அமரலாம். ஆனால் அதற்கான காலம் இன்னும் வரவில்லை. இன்னும் அவர் கொஞ்ச காலம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தற்போது தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

பயிற்சியாளர் போன்ற பெரிய பணியை மேற்கொள்வதற்கு முன்பு கொஞ்சம் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியாளர் மட்டுமல்ல தேர்வு குழு , அணியின் மேலாளர் என எந்த பொறுப்புக்கு செல்ல வேண்டுமானாலும் அவர் இரண்டு ஆண்டு ஓய்வில் இருக்க வேண்டும். இப்போது நீங்கள் அந்தப் பணியில் இணைந்தால் உங்களுடன் விளையாடிய வீரர்கள் குறித்து நீங்கள் முடிவு எடுக்க வேண்டியது வரும்.

தோனிக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து வாருங்கள் என கவாஸ்கர் கூறியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தோனி ஏற்கனவே இந்திய அணியின் மென்டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் அந்த தொடரில் இந்தியா முதல் சுற்றிலே வெளியேறியது. தோனியை பொருத்தவரை அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் பணியாற்ற போவதாக கூறி இருந்தது நினைவு கூறத்தக்கது.

Story first published: Thursday, May 11, 2023, 20:54 [IST]
Other articles published on May 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+