Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2 பேரும் கண்டிப்பா தேவை.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று.. இந்திய அணிக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 2 முக்கிய விஷயங்களை செய்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும் என ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி 2 - 1 என கைப்பற்றியுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து உடனான 4வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற தவறி விட்டது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது. ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

 டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடர் மே 28ம் தேதியன்று தான் முடிவு பெறும். எனவே வீரர்களின் பணிச்சுமையை சமாளித்து ஒரே வாரத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தயார் செய்ய வேண்டும். இதனையெல்லாம் விட பெரிய பிரச்சினையே ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் என 2 முக்கியமான வீரர்கள் இல்லாதது தான். காயம் காரணமாக அவர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை.

ப்ளேயிங் 11ல் சிக்கல்

ப்ளேயிங் 11ல் சிக்கல்

பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது பெரிய பிரச்சினையாக இல்லை. ஏனென்றால் அவர்கள் முற்றிலும் சுழற்பந்துவீச்சாளர்களை பார்த்துக்கொண்டனர். ஆனால் இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற களத்தில் பும்ராவுக்கு மாற்று வீரர் நிச்சயம் தேவை. இதே போல இங்கிலாந்து களத்தில் ரிஷப் பண்ட் மிகச்சிறப்பாக ரன் சேர்க்கக்கூடியவர். அவருக்கு சரியான மாற்று வீரருடனும் சென்றாக வேண்டும்.

கவாஸ்கரின் அறிவுரை

கவாஸ்கரின் அறிவுரை

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு சுனில் கவாஸ்கர் ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கே.எல்.ராகுலை ப்ளேயிங் 11ல் பயன்படுத்த பாருங்கள். ராகுல் மட்டும் நம்பர் 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்கினால் நீண்ட பேட்டிங் ஆழம் கிடைக்கும். ஏனென்றால் கடந்தாண்டு இங்கிலாந்தில் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்திருந்தார். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ராகுல் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இருக்க வேண்டும்.

கீப்பரின் பணி

கீப்பரின் பணி

இந்தியா போன்ற டேர்ன் ஆகும் பிட்ச்-களில் கே.எஸ்.பரத்தின் விக்கெட் கீப்பிங் சற்று மோசமாக இருந்தது. பந்து மிஸ்ஸாகி ஸ்டம்ப்-ஐ அடிக்கும் போது, கீப்பரின் கைகள் அருகில் கூட இல்லை. இப்படி இருக்கையில் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச்சென்று ரிஸ்க் எடுக்கக்கூடாது. அவரை விட கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷான் சிறப்பாக செயல்படுவார்கள். பேட்டிங்கிலும் அவர் பெரியளவில் செயல்படவில்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 14, 2023, 17:53 [IST]
Other articles published on Mar 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+