For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஒரு அடிக்கூட நகரவில்லை”.. ரோகித் கேப்டன்சியில் இருந்த ஸ்பெஷல் விஷயம்.. சுனில் கவாஸ்கர் புகழாரம்!

மொஹாலி: ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையும் பெற்றது.

 ரோகித் கேப்டன்சி

ரோகித் கேப்டன்சி

ரோகித் சர்மா கேப்டன்சி செய்த முதல் டெஸ்டிலேயே இந்திய அணி மூன்றே நாட்களில் வெற்றியை தனதாக்கியுள்ளது. முன்னதாக ரோகித் டெஸ்ட் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார், அவரின் உடற்தகுதி டெஸ்ட் கேப்டன்சிக்கு சரிவராது என சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

பாராட்டிய கவாஸ்கர்

பாராட்டிய கவாஸ்கர்

இந்நிலையில் கவாஸ்கரே ரோகித்தின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், ரோகித் சர்மா பவுலிங்கை மாற்றியது, ஃபீல்ட் செட்டிங் அமைத்தது மிகச்சிறப்பாக அமைந்தது. சரியான இடத்தில் சொல்லி வைத்து விக்கெட் எடுத்தார். அதாவது ஃபீல்டர்கள் நின்றிருந்த இடத்திற்கே சரியாக பந்து சென்றது, ஃபீல்டர்கள் ஒரு அடி கூட நகர தேவை ஏற்படவில்லை. அப்படி ஒரு துல்லியம் இருந்தது.

மதிப்பெண்கள் எவ்வளவு

மதிப்பெண்கள் எவ்வளவு

முதல் போட்டியிலேயே 3 நாட்களில் வெற்றி பெறுவது என்பது மிகச்சிறப்பான ஒன்று. பவுலிங்கில் ஜடேஜாவுக்கு ஏன் முன்கூட்டியே ஓவர் தரவில்லை என விமர்சனம் இருந்தது. ஆனால் அது கூட அணிக்கு பெரிய பின்னடைவாக அமையாதவாறு ரோகித் பார்த்துக் கொண்டார். அவரின் கேப்டன்சிக்கு நான் 9.5/10 மதிப்பெண்கள் தருவேன் எனக் கூறியுள்ளார்.

Recommended Video

India Declare செய்ய உண்மையான காரணம் இதுதான் - Jadeja
உண்மையான சவால்

உண்மையான சவால்

எனினும் ரோகித்திற்கு உண்மையான சவால் இனி தான் காத்துள்ளது. அதாவது அடிக்கடி தசைப்பிடிப்பால் பாதிக்கப்படும் ரோகித், அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்பாரா என்பது சந்தேகம் தான். முக்கியமாக அயல்நாட்டு தொடர்களில் சிக்கல்கள் உள்ளன. இதனை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, March 7, 2022, 16:00 [IST]
Other articles published on Mar 7, 2022
English summary
Former Cricketer Sunil gavaskar gives the ratings for Rohit sharma's captaincy in test cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+