Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடுப்பில் இருக்கும் இந்திய வீரர் பார்த்த வேலை தான் இதெல்லாம்.. கவாஸ்கர் வெளியிட்ட பகீர் தகவல்!

Recommended Video

Rohit - kohli Rift | ரோஹித் - கோலி கூரை மேல ஏறி நின்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க: கவாஸ்கர்- வீடியோ

மும்பை : இந்திய அணியில் ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே இருக்கும் விரிசலுக்கு என்ன காரணம்? என பலரும் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், இது எல்லாமே கடுப்பில் இருக்கும் இந்திய வீரர் ஒருவர் பார்த்த வேலை தான் என அதிரடியாக ஒரு தகவலை கூறி உள்ளார் கவாஸ்கர்.

உலகக்கோப்பை தொடரில் இருந்தே விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது.

கோலி - ரோஹித் சர்ச்சை

கோலி - ரோஹித் சர்ச்சை

பின்னர், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் கோலியை நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்பது போன்ற பேச்சுக்கள் எழுந்தது. அதே போல, ரோஹித் தான் அணிக்காக மட்டும் ஆடவில்லை, நாட்டுக்காகவும் ஆடுகிறேன் என இணையத்தில் பதிவிட்டார்.

கோலி மறுப்பு

கோலி மறுப்பு

பிசிசிஐ இதை தொடர்ந்து மறுத்து வந்தது. எல்லாமே கட்டுக் கதைகள் என்றது. ஆனால், பிசிசிஐயும் பின்னணியில் சமரசம் செய்து வைக்க முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு செல்லும் முன் கேப்டன் கோலி வதந்திகள் குறித்து வருத்தப்பட்டு பேசி இருந்தார். இந்த கட்டுக் கதைகள் வருத்தம் அளிப்பதாக கூறினார்.

நீடிக்கும் மர்மம்

நீடிக்கும் மர்மம்

ஆனால், அணிக்குள் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா - கோலி இடையே எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. அதனால், இந்த விரிசல் உண்மையா? இல்லை வெளியே அப்படி நடந்து கொள்கிறார்களா? என்ற சந்தேகம் உள்ளது.

கவாஸ்கர் விளக்கம்

கவாஸ்கர் விளக்கம்

இந்த நிலையில், முன்னாள் வீரர் கவாஸ்கர் இது குறித்து ஸ்போர்ட்ஸ்ஸ்டார் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறார். அவர் கூறுகையில், கோலி, ரோஹித் கூரை மீது ஏறி கூவினாலும் இந்த கட்டுக் கதைகள் ஓயாது எனக் கூறி இந்த விரிசல் எல்லாமே வெறும் கதை தான் என கூறி உள்ளார். அடுத்து அவர் சொன்னது தான் அதிர்ச்சியான தகவல்.

அதிர்ச்சித் தகவல்

அதிர்ச்சித் தகவல்

மேலும், அணிக்குள் கடுப்பில் இருக்கும் வீரர் யாரோ தான் இது போன்ற கட்டுக் கதைகளை கிளப்பி விடுகின்றனர். அவர்கள் நிச்சயம் இந்திய அணியின் நல விரும்பிகள் இல்லை. அவரது வெறுப்பு மற்றும் பொறாமையால் அணி பாதிக்கப்படுகிறது.

நிர்வாகமும் ஈடுபடுகிறது

நிர்வாகமும் ஈடுபடுகிறது

பின்னர் இந்த கட்டுக் கதைகள் சில நிர்வாகிகள் தங்கள் அரசியலை விளையாட பொருத்தமாக உள்ளது என பிசிசிஐ அதிகாரிகளையும் குத்திக் காட்டி இருக்கிறார் கவாஸ்கர். அவ்வளவு எளிதில் கவாஸ்கர் நிர்வாகம் பற்றியோ, அணிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பற்றியோ பேசி விட மாட்டார்.

வேறு என்னவோ?

வேறு என்னவோ?

ஆனால், அவரே இப்போது இப்படி கூறி இருக்கும் நிலையில் இந்திய அணிக்குள் ரோஹித் - கோலி விரிசல் என்ற சர்ச்சையை தாண்டி வேறு ஏதோ ஒன்று இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, August 9, 2019, 21:08 [IST]
Other articles published on Aug 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+