“அந்த 3 பேரு தான் இந்திய அணியின் எதிர்காலம்”பிசிசிஐ-க்கு கவாஸ்கர் காட்டிய வழி!அவ்வளவு பெரிய வீரர்களா
மும்பை: இனி வரும் போட்டிகளில் 3 இளம் வீரர்களை பிசிசிஐ மனதில் வைத்து செயல்பட்டால் நல்லது என சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
பலவீனமாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை மோசமாக தோற்றது இந்திய அணி.
அணி முழுவதும் நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்று கூறிய போதும், தென்னாப்பிரிக்க அணியை ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்தியாவால் தோற்கடிக்க முடியவில்லை.

இந்திய அணி
எனவே அடுத்து வரவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அதீத கவனத்துடன் ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக அனுபவ வீரர்களை ஓரம்கட்டிவிட்டு, முழுவதுமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கவாஸ்கரின் அட்வைஸ்
இந்நிலையில் பிசிசிஐ-க்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முக்கிய அட்வைஸ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வெங்கடேஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் தங்களுக்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி மிகவும் அழுத்தமானதாக இருந்தது. ஆனால் அவர்கள் 3 பேரும் சிறப்பாக கையாண்டனர்.

என்ன காரணம்
சூர்யகுமார் யாதவ் தனது முதல் போட்டியிலேயே 32 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்களும் தீபக் சஹார் 2 விக்கெட்களுடன் சேர்த்து ஒரு அரைசதத்தையும் விளாசினார். இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர். எனவே இவர்கள் 3 பேரையும் பிசிசிஐ மனதில் வைத்தால் தான் இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
Recommended Video

பிசிசிஐ-ன் நடவடிக்கை
இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தான் முதன்மை வீரர்களாக இருக்கவுள்ளனர். இதனால் கவாஸ்கர் கூறியது நிறைவேறவுள்ளது.


Click it and Unblock the Notifications