
தேவையில்லாத கருத்துகள்
அதில் இந்தியாவில் விளையாடுவதும், அணியை வழிநடத்துவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என ஸ்மித் கூறியிருக்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு பந்தும் இங்கு சவாலாக இருக்கும். ஆட்டத்தின் போக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிவிடும். தற்போது விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் ஆடுகளம் குறித்து எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. பேசுவதெல்லாம் முன்னாள் வீரர்கள் தான். அவர்கள் தான் தேவையில்லாத கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

ஒரே ஆடுகளம்
அதில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மனதிற்கு வேதனையை தருகிறது. ஏனென்றால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 75 ஆண்டுகால கிரிக்கெட் நட்புறவை தற்போது கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சரியாக இல்லை. இரண்டு அணிக்குமே ஒரே ஆடுகளத்தை தான் தயாரித்திருக்கிறார்கள்.

சந்தேகப்பட வேண்டாம்
நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது கொடுக்கப்படும் ஆடுகளத்தில் விளையாடிவிட்டு சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய சொந்த ஊரில் இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் விளையாட மாட்டீர்கள். எனவே இந்தியாவின் நேர்மையை சோதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நேர்மை என்பது உங்கள் ஒரு நாட்டுக்கு மட்டும் தான் சொந்தம் என்பது கிடையாது. நான் வெளிப்படையாக சொல்கிறேன் நான் இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறேன்.

கடும் கண்டனம்
எனவே என் மீதும் என் நாட்டின் மீதும் யாராவது சந்தேகக்கிப்படும் வகையில் பேசினால் என் மனதில் இருக்கும் வார்த்தைகளை தான் பேச நேரிடும் என்று கவாஸ்கர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கூறியிருக்கிறார். அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் மதியநேர இடைவெளி வரை ஒரு விக்கெட் கூட விழவில்லை என்பது நினைவுகூர்த்தக்கது.


Click it and Unblock the Notifications











