எல்லா பேட்ஸ்மேனும் செய்த ஒரே தவறு.. மைல்கல்லுக்காக இப்படி செய்யலாமா? கவாஸ்கர் கடும் தாக்கு
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 296 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனை அடுத்து 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 444 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 234 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், ஒரு வீரர் கூட நிலைத்து நின்று ஆடும் உத்வேகத்துடன் களமிறங்கவில்லை என்று சாடினார். மேலும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தனிப்பட்ட சாதனைகளை குறி வைத்து தான் விளையாடுவதாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டார்.
விராட் கோலி 49 ரன்கள் எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடினார். அதற்கு காரணம் இன்னும் ஒரு ரன் எடுத்தால் அரை சதம் எடுத்து விடலாம் என்ற காரணத்தினால் தேவையில்லாமல் அந்த சாட்டை ஆடினார். இதனால் தான் சொல்கிறேன் டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட மைல்கல்களை மறந்து விட வேண்டும்.
பெரிய இலக்கை துரத்தும் போது அடுத்த அரை மணி நேரம் விக்கெட் விழாமல் நான் விளையாடுவேன் இல்லை. இந்த பார்ட்னர்ஷிப்பை வைத்து மேலும் 20 ரன்கள் அல்லது 30 ரன்கள் சேர்ப்பேன் என்று சின்ன சின்னதாக தங்களுக்குள்ளேயே இலக்கை நிர்ணயித்துக் கொண்டு விளையாட வேண்டும்.இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் Front foot சாட் ஆடி ஆட்டம் இழந்தார்கள். ஷாட் பாலை கூட Front foot எடுத்து விளையாடுவதை எப்படி சரி என்று ஒப்புக்கொள்ள முடியும்.
அனைத்து பந்துக்குமே ஃபிரண்ட் foot எடுத்து ஆடுவது சரியா என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடி உள்ளார். இதற்கு பதிலளித்த ஹர்ஷா போக்லே கவாஸ்கர் சொல்வது சரி என்றும் அவர் விளையாடும் போது தான் எந்த ரன்களில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் அணிக்காக விளையாடினார் என்றும் ஹர்ஷா போக்கிலே பாராட்டினார்.


Click it and Unblock the Notifications