Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதெல்லாம் இனி நிறுத்திக்கொள்ளனும்”.. ரோகித் தவறால் இந்தியா தோற்றதா??.. சுனில் கவாஸ்கர் கடும் சாடல்!

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு ரோகித் சர்மா தான் காரணம் என்பதை போல சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது.

சென்னையில் பரபரப்பாக நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 248 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்ற போதும், அடுத்த 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் முதல் போட்டியில் வென்ற இந்தியா, ரோகித் சர்மாவின் தலைமையில் மட்டும் தோல்வியை தழுவியது ஏன்? என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குடும்ப விழா காரணமாக முதல் போட்டியில் இருந்தும் மட்டும் ரோகித் விலகியிருந்தார்.

கவாஸ்கரின் கருத்து

கவாஸ்கரின் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை ஒரு கேப்டனாக ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். ஒருபோட்டிக்கு இருப்பார்? ஒரு போட்டிக்கு இருக்கமாட்டார் என்பதை போல ஒரு கேப்டன் இருக்கக்கூடாது. அது குடும்ப விழா என்பது புரிகிறது. எனினும் உலகக்கோப்பை தொடரின் போது குடும்ப விழா எனக்கூறிக்கொண்டு போட்டியை புறகணிக்க முடியாது அல்லவா?, அவசர காரியங்கள் என்றால் பிரச்சினை அல்ல, ஆனால் முக்கிய நேரங்களில் இதுபோன்று செய்யக்கூடாது என கவாஸ்கர் கூறியுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஒரு கேப்டன் அணியை முழுவதுமாக வழிநடத்தும் போது அனைத்து வீரர்களும் ஒருவரின் கீழ் செயல்படும். அவரின் மனநிலைக்கு ஏற்ப திட்டங்களில் இருப்பார்கள். ஆனால் கேப்டன்கள் மாறிக்கொண்டே இருந்தால் வீரர்களின் மனநிலையும் உடையும். எனவே இனிமேலாவது ரோகித் தொடர்ச்சியாக ஒரு கேப்டனாக போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடுத்த பணி

அடுத்த பணி

இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை எதிர்நோக்கியுள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் டி20 தொடர் வரும் மே 28ம் தேதி வரை இருப்பதால், ஒரு வாரத்திற்குள் டெஸ்ட் ஃபார்மெட்டிற்கு மாற வேண்டிய சிக்கலில் ரோகித் சர்மாவின் படை இருக்கிறது.

Story first published: Thursday, March 23, 2023, 18:52 [IST]
Other articles published on Mar 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+