Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் சுனில் நரைன் ஓய்வை அறிவித்தார்.. அடுத்த திட்டம் என்ன?

டெல்லி : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சுனில் நரைன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

அவர் கடைசியாக 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி இருந்தார். தொடர்ந்து உள்ளூர் டி20 தொடர்களில் ஆட ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர் ஆல் - ரவுண்டர் ஆவார். சுழற் பந்துவீசுவதில் வல்லவரான அவர், அதிரடி பேட்டிங்கிலும் அவ்வப்போது கை கொடுப்பார்.

Sunil Narine announces retirement from international cricket and revealed his plans

தற்போது ஓய்வை அறிவித்து இருந்தாலும் தான் தொடர்ந்து உள்ளூர் டி20 தொடர்களில் ஆட இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

தன் ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் என் நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தை தான் எப்போது களத்துக்கு சென்றாலும் தன்னுடன் இருந்ததாகவும், அவரது ஆதரவுக்கு மிக்க நன்றி எனவும் கூறி உள்ளார். சில சமயம் தனது கிரிக்கெட் கனவு சரியா? இல்லையா? என குழம்பிய போது தந்தை தனக்கு சரியான பாதையை காட்டியதாகவும் கூறி இருக்கிறார் சுனில் நரைன்.

சுனில் நரைன் 2011இல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அறிமுகத்தை பெற்றார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 2012இல் அறிமுகம் ஆனார். அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 21 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 65 ஒருநாள் போட்டிகளில் ஆடி 92 விக்கெட்களும், 51 டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்று இருந்தார்.

Story first published: Monday, November 6, 2023, 11:44 [IST]
Other articles published on Nov 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+