Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனையை கூட முறியடிச்சிடலாம்.. ஆனால் அந்த இருவரின் சாதனைலாம் வாய்ப்பே இல்ல.. என்ன தெரியுமா?

சென்னை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளில் எவையெல்லாம் முறியடிக்கப்பட வாய்ப்பே இல்லை என்ற விவாதம் தொடங்கியுள்ளது. அதில் சச்சின் சாதனையை காட்டிலும், முக்கிய 2 வீரர்கள் படைத்துள்ள சாதனைகள் முறியடிக்கப்பட வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் 16 வயதில் அடியெடுத்த வைத்த சச்சின் டெண்டுல்கர், சாதனைகளை மட்டும் தனி பட்டியலாக எழுதும் அளவிற்கு சாதனை படைத்துள்ளார். அதில் 200 டெஸ்ட் போட்டிகள், அதிக டெஸ்ட் ரன்கள், அதிக ஒருநாள் ரன்கள், 100 சதங்கள் உள்ளிட்டவை இனி வரப்போகும் வீரர்களால் முறியடிக்க முடியாது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் சவாலாக இருக்கிறார்கள்.

Sunil Narine Maiden Over and Muralitharans 67 times 5 Wicket haul record is not easy to Achieve

இந்த நிலையில் இனி கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க வாய்ப்பே இல்லாத சாதனைகளாக இரண்டு வீரர்கள் செய்துள்ள சாதனை பார்க்கப்படுகிறது. அதில் முதல் சாதனை என்னவென்றால், இலங்கை அணியின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனை ஒன்று உள்ளது. 800 விக்கெட்டுகள் சாதனையை ஆண்டர்சன் நெருங்கி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனை கணக்கிட்டு பார்த்தால் மொத்தமாக 335 விக்கெட்டுகள் உள்ளது. இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளே பெரிய விஷயமாக பார்க்கப்படும் சூழலில், 67 முறைக்கு மேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்திவது சாதாரண விஷயமாக இருக்காது. இந்த சாதனையை முறியடிக்க இனி எந்த வீரரும் வர மாட்டார் என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.

Sunil Narine Maiden Over and Muralitharans 67 times 5 Wicket haul record is not easy to Achieve

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 லெஜண்ட் சுனில் படைத்துள்ள சாதனையாகும். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ரெட் ஸ்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது குயானா அமேஸான் வாரியர்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில், முடிவை எட்டுவதற்காக சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது முதலில் பேட்டிங் செய்த ரெட் ஸ்டீஸ் அணி சூப்பர் ஓவரில் 11 ரன்களை விளாசியது.

இதன் பின் குயானா அணி சார்பாக சூப்பர் ஓவரை வீச சுனில் நரைன் வந்தார். நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்த நிலையில், முதல் 4 பந்துகளிலும் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. இதையடுத்து 5 பந்தில் விக்கெட் வீழ்த்திய சுனில் நரைன், 6வது பந்திலும் ரன் கொடுக்கவில்லை. இதன் மூலம் சூப்பர் ஓவரை மெய்டனாக வீசிய முதல் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார். இந்த சாதனையையும் வேறு எந்த வீரரும் படைக்க வாய்ப்பே இல்லை என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, August 5, 2023, 10:22 [IST]
Other articles published on Aug 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+