For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை பங்கம் பண்ண வெஸ்ட் இண்டீஸ் வெயிட்டிங்..! அவங்க 2 பேரும் ரிட்டர்ன்ஸ்..!!

Recommended Video

Ind Vs WI Series : இந்தியாவை பங்கம் பண்ண அவங்க 2 பேரும் திரும்ப வந்துட்டாங்க !- வீடியோ

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், டி20 போட்டிக்கான வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்துள்ளது.

இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.

Sunil narine, pollard back in west indies squad against india T20 matches

ரிஷப் பன்ட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தீபக் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டி20 போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் 14 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சில வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் இருந்த அதிரடி வீரரான பொல்லார்ட், சுனில் நரேன் ஆகியோர் அணியில் தேர்வாகி உள்ளனர். தேர்வுக்குழு இடைக்கால தலைவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பொல்லார்டையும், நரேனையும் அணியில் சேர்த்து உள்ளதாக கூறியுள்ளார்.

அதில் ஐபிஎல் தொடர்களில் கலக்கிய ரசல், அணியில் இடம் பெற்றார். இவர்கள் டி20 போட்டிகளில் கலக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ரசல் காயமடைந்துள்ளதால் சிகிச்சைக்கு பின்னர் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விபரம்: பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, ரோவ்மன் பாவெல், கீமா பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரசல், காரி பியர்ஸ்.

Story first published: Tuesday, July 23, 2019, 12:51 [IST]
Other articles published on Jul 23, 2019
English summary
Sunil narine, pollard back in west indies squad against india T20 matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+