
ராகுல் - ஆதியா காதல்
அந்தவகையில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி ஆகியோர் காதலித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தகவல்கள் மட்டுமே பரவி வந்த நிலையில் சமீபத்தில் அது உறுதியானது. ஆதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இவர் தமிழில் தர்பார் படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் எப்போது?
இந்நிலையில் நடிகர் சுனில் ஷெட்டி, தனது மகள் ஆதியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், கே.எல்.ராகுல் தற்போது மிகவும் பிசி பயணத்தில் இருந்து வருகிறார். ஆசிய கோப்பை தொடர், உலகக்கோப்பை, தென்னாப்பிரிக்க தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என பிசியாக இருக்கிறார். இதற்கு இடையே இருவருக்கும் ஓய்வு கிடைத்தால் அதில் திருமணம் நடத்தி முடித்துவிடுவேன்.

தந்தையாக எனது ஆசை
ஒரு தந்தையாக நான், மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் குழந்தைகள் தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். ராகுலின் திட்டங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது. 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே கேப் கிடைக்கிறது. ஆனால் ஒரு திருமணம் என்பது அவ்வளவு குறுகிய காலத்தில் நடப்பது இல்லை அல்லவா? எனவே அதற்கான நேரம் நிச்சயம் வரும்.

ராகுலுக்கு சிக்கல்
கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் இருந்து எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடமலேயே இருந்து வந்தார். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம், கொரோனா பாதிப்பு என அடுத்தடுத்து பாதிப்புகளை சந்தித்தார். அடுத்ததாக வரவுள்ள ஆசிய கோப்பை தொடரில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications