For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சார் தெரியாம பண்ணிட்டோம்.. திரும்பி வந்துடுங்க.. பழைய கோச்சிடம் சரண்டர் ஆன ஐபிஎல் டீம்!

ஹைதராபாத் : ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2021 ஐபிஎல் தொடரை மனதில் வைத்து முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.

அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடியை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது அந்த அணி.

ஏற்கனவே, தலைமை பயிற்சியாளராக ட்ரெவர் பேலிஸ் இருக்கும் நிலையில், டாம் மூடிக்கு புதிய பதவியை அளித்து அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளது இந்த அணி. இதன் பின்னணி என்ன என்பது பற்றியும் தெரிய வந்துள்ளது.

வெற்றிகரமான ஐபிஎல் அணி

வெற்றிகரமான ஐபிஎல் அணி

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை அடுத்து வெற்றிகரமான ஐபிஎல் அணி என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான். அந்த அணி 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிளே-ஆஃப் முன்னேறி உள்ளது.

முன்னேற்றினார்

முன்னேற்றினார்

2016 முதல் 2019 வரை அந்த அணியை நான்கு முறை பிளே-ஆஃப் முன்னேற வைத்துக் காட்டினார் அப்போதைய பயிற்சியாளர் டாம் மூடி. ஒரு முறை கோப்பையும் வென்றது அந்த அணி. அணியில் கேப்டன் இல்லை, நல்ல பந்துவீச்சாளர் இல்லை, நட்சத்திர வீரர் இல்லை என ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் பதறாமல் அதை சமாளித்து வந்தார்.

பதவி விலகினார்

பதவி விலகினார்

2019இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாததை அடுத்து அவர் பதவி விலகினார். அப்போது உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்-ஐ பயிற்சியாளராக நியமித்தது ஹைதராபாத் அணி.

மீண்டும் அழைப்பு

மீண்டும் அழைப்பு

2020 ஐபிஎல் தொடரிலும் பிளே-ஆஃப் வரை முன்னேறினாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் தங்களின் பழைய பயிற்சியாளரை மீண்டும் அணியில் சேர்த்து அணிக்கு வழிகாட்டுமாறு அழைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம்.

புதிய பதவி

புதிய பதவி

ட்ரெவர் பேலிஸ் பயிற்சியாளராக தொடரும் நிலையில், டாம் மூடியை அணியின் கிரிக்கெட் இயக்குனராக நியமித்துள்ளது அணி நிர்வாகம். ஏற்கனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் கிரிக்கெட் இயக்குனர் என்ற பதவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரு அணிகள்

மற்ற இரு அணிகள்

பெங்களூர் அணியில் சைமன் கேடிச் தலைமை பயிற்சியாளராகவும், மைக் ஹெஸ்ஸன் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும் உள்ளனர். அதே போல, மும்பை இந்தியன்ஸ் அணியில் மகிளா ஜெயவர்தனே பயிற்சியாளராகவும், ஜாகிர் கான் கிரிக்கெட் இயக்குனர் பதவியிலும் உள்ளனர்.

ஆலோசகர்

ஆலோசகர்

அதே போல, ஹைதராபாத் அணியில் ட்ரெவர் பேலிஸ் தலைமை பயிற்சியாளராகவும், டாம் மூடி இயக்குனர் பதவியிலும் உள்ளனர். அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 16, 2020, 15:21 [IST]
Other articles published on Dec 16, 2020
English summary
Sunrisers Hyderabad called for Tom Moody services again ahead of IPL 2021.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+