Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி

துபாய்: 7வது ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தியது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தவானும், ஆரோன் பிஞ்ச்சும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர்.

தவான் 33 ரன்கள்

தவான் 33 ரன்கள்

டெல்லி அணியின் நதீம் வீசிய 7 வது ஓவரில் 22 பந்துகளில் 33 ரன்களை குவித்த தவான் ஆட்டமிழந்தார். இதனால் 3வது ஆட்டக்காரராக டேவிட் வார்னர் களமிறங்கினார்.

வெளுத்து கட்டிய ஆரோன் பிஞ்ச்- வார்னர் ஜோடி

வெளுத்து கட்டிய ஆரோன் பிஞ்ச்- வார்னர் ஜோடி

ஆரோன் பிஞ்ச்சும், வார்னரும் டெல்லி அணியின் பந்துகளை வெளுத்து வாங்கினர். இருவரும் கடைசி வரை விளையாடி ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிஞ்ச் 53 பந்துகளில் 88 ரன்களும், வார்னர் 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர்.

184 ரன்கள் குவிப்பு

184 ரன்கள் குவிப்பு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்களை குவித்தது.

செம பதிலடி கொடுத்த டெல்லி

செம பதிலடி கொடுத்த டெல்லி

பின்னர் களமிறங்கிய டெல்லியின் டி காக்கும், முரளி விஜயும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர்.

லேசான தடுமாற்றம்

லேசான தடுமாற்றம்

12வது ஓவரில் 30 பந்துகளில் 48 ரன்களை குவித்த டி காக் அவுட்டானார். சிறிது நேரத்தில் முரளி விஜய்யும் 52 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த பீட்டர்சன்னும், கார்த்திக்கும் வெற்றி இலக்கு கடினமானதால் அடித்து ஆட முயன்று தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கடைசி ஓவரில் போராடிய டெல்லி

கடைசி ஓவரில் போராடிய டெல்லி

அந்த அணியின் டுமினியும், திவாரியும் இணைந்து கடைசி வரை போராடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். கடைசி இரண்டு பந்துகளில் 17 ரன்கள் தேவை என்றிருந்தபோது கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டுமினி சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டத்தை டை செய்யலாம் என்ற விறுவிறுப்பான நிலையில் கடைசி பந்தில் 2 ரன்களை மட்டுமே டுமினியால் எடுக்க முடிந்தது.

இதனால் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் ஆரோன் பிஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Story first published: Saturday, April 26, 2014, 10:41 [IST]
Other articles published on Apr 26, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+