அட… அட.. !! பயிற்சியில் பட்டைய கிளப்பிய வார்னர்.. 43 பந்தில் 65 ரன்கள்!
ஹைதராபாத்: ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில், ஒரு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் ஹைதராபாத் அணிக்கு திரும்பி இருக்கும் வார்னர், 43 பந்தில் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது. வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் சில தினத்தில் தொடருக்கான முழு அட்டவணையை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஆட்டம்
தற்போதைய அட்டவணைப்படி, வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது.

தடைக்காலம்
கடந்த ஆண்டில் தென் ஆப்ரிக்க தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் அடுத்த வாரம் முடிவுக்கு வருகிறது.
உற்சாக வரவேற்பு
இந்நிலையில் ஹைதராபாத் அணிக்காக வார்ன்ரும், ராஜஸ்தான் அணிக்காக ஸ்மித்தும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.அதற்காக இந்தியா வந்துள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அசத்தல் ரன்கள்
இந்நிலையில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் வார்னர் 43 பந்தில் 65 ரன்கள் அடித்து அசத்தினார். அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications