Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று பர்த்டே கொண்டாடும் இந்த கியூட் குட்டிப் பாப்பா யார் தெரிகிறதா?

சென்னை: இவரது தலைமையிலான அணி நடப்பு ஐபிஎல் சீசனின் சாதிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அந்த கவலையை மறக்க வைத்துவிட்டார் அந்த வீரரின் மகள்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை குவித்த பெருமைக்குரிய சுரேஷ் ரெய்னாதான் அந்த வீரர். சிஎஸ்கே அணி வீரரான இவர், கடந்த இரு சீசன்களிலும் குஜராத் லயன்ஸ் கேப்டனாக பங்களித்தார்.

கடந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு குஜராத் சென்றபோதிலும், இந்த வருடம் அந்த அணி புள்ளிபட்டியலில், கடைசிக்கு முந்தைய இடத்தைதான் பிடிக்க முடிந்ததால் ஐபிஎல் தொடருக்கே குட்பை சொல்லிவிட்டது.

சிஎஸ்கே வருவார்

சிஎஸ்கே வருவார்

அடுத்த வருடமும் முதல் குஜராத் லயன்ஸ் அணி இருக்காது. ரெய்னா சிஎஸ்கேவுக்கே திரும்புவார் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு. இருப்பினும் நடப்பு சீசனின் சோகத்தை மறக்கடித்துள்ளார் ரெய்னாவின் குட்டி மகள்.

ரெய்னா மகள்

ரெய்னா மகள்

ரெய்னாவின் கியூட் பேபிக்கு, இன்று முதலாமாண்டு பிறந்த நாள் ஆகும். ரெய்னாவின் மகள் பெயர் கிரேசியா. பெயரை போலவே மிகவும் இனிமையானவர் ரெய்னா மகள்.

டிவிட்டரில் வாழ்த்து

ஒரு வருடம் முன்பாக எங்கள் வாழ்க்கைக்குள் நீ வந்தாய். பெரும் வெளிச்சம், மகிழ்ச்சியோடு எங்களுடன் நீ வளர்கிறாய்! ஹேப்பி பர்த் டே கிரேசியா!" என டிவிட்டரில் மகள் புகைப்படத்தை போட்டு வாழ்த்தியுள்ளார் ரெய்னா.

வாழ்த்து மழை

பிங்கி கலர் குழந்தையின் கியூட்டான புகைப்படம் மற்றும் குழந்தையை சுற்றியுள்ள அலங்காரங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. டிவிட்டரில் குழந்தைக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

Story first published: Monday, May 15, 2017, 14:17 [IST]
Other articles published on May 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+