Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே பயிற்சிகள்ல ஜாய்ன் பண்ண புறப்பட்டாரு 'சின்ன தல'இந்த சீசன்ல சிறப்பான சம்பவங்கள் காத்துருக்கு!

மும்பை : ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளன. இதையொட்டி அனைத்து அணிகளும் இங்கிலாந்து தொடரில் இல்லாத வீரர்களை கொண்டு தங்களது பயிற்சிகளை துவக்கிவிட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்த சில தினங்களாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டது. இதில் தோனி உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

தற்போது அணி வீரர்கள் மும்பைக்கு தங்களது பயிற்சிகளை மாற்றவுள்ள நிலையில், சுரேஷ் ரெய்னாவும் மும்பைக்கு தனது பயணத்தை துவக்கியுள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்

ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் இந்தியாவின் 6 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி 8 ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சிகளை துவங்கி நடத்தி வருகின்றன. இந்த சீசனில் ஹோம் அட்வான்டேஜ் கொடுக்கப்படாத நிலையில் அதையொட்டி அணிகள் பயிற்சிகளை திட்டமிட்டு வருகின்றன.

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஐபிஎல் தொடரையொட்டி கடந்த சில தினங்களாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் தங்களது பயிற்சிகளை சிஎஸ்கே அணி துவங்கி நடத்தி வருகிறது. இதில் கேப்டன் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சில புதிய வீரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர்.

சிஎஸ்கே நடவடிக்கை

சிஎஸ்கே நடவடிக்கை

இன்னிலையில் ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் தங்களது பயிற்சிகளை மும்பைக்கு மாற்ற சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அங்கு பயிற்சிகளை சிஎஸ்கே அணி துவக்கவுள்ளது. இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ரெய்னா மும்பை பயணம்

ரெய்னா மும்பை பயணம்

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்த பயிற்சிகளில் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை. இது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்திய நிலையில், வரும் 26ம் தேதி மும்பையில் அவர் பயிற்சிகளில் ஈடுபடுவார் என்றும் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரெய்னா சிஎஸ்கே அணியில் இணையும்வகையில் மும்பைக்கு தனது பயணத்தை துவக்கியுள்ளார்.

உற்சாக போஸ்

உற்சாக போஸ்

அவர் விமானநிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தன்னுடைய லக்கேஜ் உள்ளிட்டவற்றுடன் அவர் கையாட்டி உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். கடந்த சீசனில் விளையாடாத சின்ன தல-யை வரவேற்க சிஎஸ்கே மட்டுமின்றி அதன் ரசிகர்களும் தற்போது தயாராகி வருகின்றனர்.

Story first published: Wednesday, March 24, 2021, 11:37 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+