சின்ன தல சுரேஷ் ரெய்னா..! 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…!
சென்னை:2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனிலேயே நான்கு முக்கிய சாதனைகளை படைக்க சுரேஷ் ரெய்னா காத்திருக்கிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் விரும்பக் கூடியவர் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவிர்த்து வருகிறார். ஆனாலும், சென்னை அணியில் அவருக்கு தனி இடம் உள்ளது.

15 ரன்கள் பாக்கி
சுரேஷ் ரெய்னா, நடப்பு சீசனில் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். அவர் இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

200 சிக்சர்கள்
அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இன்னும் 5 கேட்ச்கள் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைக்க உள்ளார்.

அரைசதங்கள்
மேலும், அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கவுதம் கம்பீர், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 36 அரைசதங்களுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

முதலிடம் பிடிப்பாரா?
35 அரைசதங்களுடன் ரெய்னா 2-வது இடத்தில் இருக்கிறார். ஆகவே... இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க ரெய்னாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications