ரீடெயின் செய்யும் திட்டமில்லை..ரெய்னாவிற்கு சிஎஸ்கே கொடுக்க போகும் ஷாக் செய்தி.. காரணம் இதுதான்!
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் ரெய்னாவை சிஎஸ்கே அணி ரீடெயின் செய்வது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.
2021 ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. 2020 ஐபிஎல் துபாயில் நடந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே தயார் ஆக தொடங்கிவிட்டது. பெரிய அளவில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல்
இந்த ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவது குறித்து பிப்ரவரி முதல் வாரம் நடக்க உள்ள ஏலத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள். இந்த நிலையில் இந்த தொடரில் அணிகள் ரீடெயின் செய்ய விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 21ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும். இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது.

எப்படி
அதாவது ஐபிஎல்லில் இருக்கும் அணிகள் எந்தெந்த வீரர்களை எல்லாம் தக்க வைக்க விருப்பம், யாரை எல்லாம் ரிலீஸ் செய்ய விருப்பம் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். முக்கிய வீரர்களை வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்ய எல்லா அணிகளும் திட்டமிட்டுள்ளது.

ஆர்டிஎம்
இதில் ரிலீஸ் செய்யும் சில வீரர்களை அதே அணிகள் ஏலத்தில் குறைந்த விலையில் எடுக்க முடியும். அல்லது ஆர்டிஎம் மூலம் அதே விலைக்கு ஏலத்தில் எடுக்க முடியும். இதனால் 2021 ஐபிஎல் தொடரில் ரெய்னாவை சிஎஸ்கே அணி ரீடெயின் செய்வது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். தற்போது ரெய்னாவிற்கு 11 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது.

மோசம்
ஆனால் இவர் இவ்வளவு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு பிட்டாக இல்லை. முக்கியமாக தற்போது நடக்கும் சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ரெய்னா நன்றாக ஆடினார். ஒரே ஒரு ஓவர் வீசிய ரெய்னா விக்கெட்டும் எடுக்கவில்லை. இவரின் பீல்டிங்கும் முன்பு போல அதிரடியாக இல்லை. இதுதான் இவரை விடுவிக்க காரணமாக இருக்கும் என்கிறார்கள்.

வாய்ப்பு இல்லை
இதனால் இவரை 11 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைக்க வேண்டுமா என்று சிஎஸ்கே கவலையில் உள்ளது. இதனால் ரெய்னாவை சிஎஸ்கே அணி ரீடெயின் செய்யாது என்கிறார்கள். இதற்கு பதிலாக சிஎஸ்கே அணி பெரும்பாலும் சாம் கரன், தோனி, ஜடேஜா, டு பிளசிஸ் ஆகியோரை ரீ டெயின் செய்யும்.

ஏலத்தில் எடுக்கும்
ரெய்னாவை ஏலத்தில் போது குறைந்த விலைக்கு சிஎஸ்கே எடுக்கும். வேறு அணி அதிக தொகைக்கு ரெய்னாவை எடுக்க முயன்றால், அவரை ஆர்டிஎம் மூலம் சிஎஸ்கே கடைசி கட்டத்தில் தக்க வைக்கும் என்கிறார்கள். இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications