Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த சாதனைகளுக்கு தயாராகும் சின்ன தல... சிக்ஸ், பவுண்டரின்னு அடிச்சு தூள் கிளப்ப ரெடி!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.

Recommended Video

பெங்களூரு அணிக்கு முதல் தோல்வியை கொடுத்த சென்னை சிங்கங்கள்: 69 ரன்களில் அபார வெற்றி..!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த போட்டி மிகவும் கடுமையாகவும் ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை அளிக்கும் வகையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

19வது போட்டி

19வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் முதல் முறையாக இந்த தொடரில் மோதுகின்றன.

ஆவலுடன் ரசிகர்கள்

ஆவலுடன் ரசிகர்கள்

இரு அணிகளும் அடுத்த கட்டத்திற்கு நகரும் தீவிரத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ரசிகர்களும் இந்த போட்டியை பார்க்க ஆர்வத்துடன் காத்துள்ளனர். இருவரில் யார் கேப்டனாக வெற்றி கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

2வது இடத்தில் சிஎஸ்கே

2வது இடத்தில் சிஎஸ்கே

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆர்சிபி ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தனது முதல் போட்டியில் தோல்வி கண்ட சிஎஸ்கே, தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இரு சாதனைகளுக்கு காத்திருப்பு

இரு சாதனைகளுக்கு காத்திருப்பு

சில போட்டிகளில் சொதப்பிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் தோனியின் சிறப்பான ஆட்டத்தை காண ரசிகர்கள் இன்றைய தினம் காத்திருக்கின்றனர். இதனிடையே அந்த அணியின் சின்ன தல என்று கூறப்படும் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இரு சாதனைகளுக்காக காத்திருக்கிறார்.

அதிரடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

அதிரடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

இன்றைய போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்தால் 200 சிக்ஸ்களை அவர் ஐபிஎல்லில் பூர்த்தி செய்தர். இதேபோல 2 பவுண்டரிகளை அடித்தால் ஐபிஎல்லில் 500 பவுண்டரிகளை பூர்த்தி செய்ய முடியும். இதனிடையே, ரெய்னாவின் சிறப்பான ஆட்டங்களை காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, April 25, 2021, 21:05 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+