மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை விடுவிக்கின்றோம். யாரை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பது குறித்து நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். முதலில் சிஎஸ்கே குறித்து பேசிய ரெய்னா, சிஎஸ்கே அணி சுழற் பந்துவீச்சாளரான நூர் அகமதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் என்றால் அவர் மாயாஜால சுழற் பந்துவீச்சாளராக இருக்கின்றார். அதே போன்று தோனி கண்டிப்பாக தக்க வைக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு அவர் கண்டிப்பாக விளையாடுவார். எனவே அவர் அணியில் இருக்க வேண்டும். இதுபோன்று ருதுராஜ் அணியின் கேப்டன் ஆக தொடர வேண்டும். ஜடேஜாவும் கண்டிப்பாக தக்கவைக்கப்பட வேண்டும்.
அவர் தான் சிஎஸ்கே அணியின் மிக பலம் வாய்ந்த வீரர். ஜடேஜா அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். விடுவிக்கப்படும் வீரர்களில் கான்வே இருக்க வேண்டும். இதுபோன்று விஜய் சங்கரும் பல வாய்ப்புகளை வீணடித்து விட்டார். அவரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுபோன்று தீபக் ஹூடாவும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ரெய்னா கூறினார்.
இதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் இருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய ரெய்னா, ரோகித் சர்மா கண்டிப்பாக மும்பை அணியில் விளையாட வேண்டும். அவர் மும்பை அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்திருக்கின்றார். தீபக் சாஹர் தக்க வைக்கப்பட வேண்டும். ஏன் ஏனென்றால் அவருக்கு மாற்று வீரர் யாரும் ஏலத்தில் கிடைக்க மாட்டார். எனவே அவர் இருப்பதே நல்லது. இதைப் போன்று டிரெண்ட் பவுல்ட் அணியில் நீடிக்க வேண்டும் என்று ரெய்னா கூறியுள்ளார்.