For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி முதுகில் குத்திய ரெய்னா! சிறந்த ஐபிஎல் 2023 அணியில் தோனிக்கு இடமில்லை.. கடுப்பான ரசிகர்கள்

மும்பை : தோனியை தல என்று ரசிகர்கள் அழைப்பதாலோ என்னவோ தெரியவில்லை பலரும், அவரது முதுகில் குத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சீசனில் ஜடேஜாவுக்கும் தோனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் காயம் ஏற்பட்டதாக கூறி தொடரலிருந்து பாதியில் விலகினார்.

இதே போன்று 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சுரேஷ் ரெய்னா அணியை விட்டு விலகி சென்றார். அதன் பிறகு 2022ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கவில்லை.

Suresh raina picks hardik pandya as captain of ipl 2023 over ms dhoni

ஆனால் சமீபத்தில் ரெய்னாவும், தோனியும் சந்தித்து கொண்டனர். இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு மலர்ந்துவிட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் கருதினர். இந்த நிலையில், நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து சுரேஷ் ரெய்னா பிளேயிங் லெவன் ஒன்றை உருவாக்கயுள்ளார்.

ரெய்னா பிளேயிங் லெவன் :

ஹர்திக் பாண்டியா ( கேப்டன்), ஜெய்ஷ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரான் ( விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், சாஹல் கூடுதல் வீரர்கள் - கேமிரான் கிரீன், யாஷ் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், பதிராணா, ஜித்தேஷ் சர்மா

இதே போன்று சிஎஸ்கே அணிக்காக முதல் சீசனில் விளையாடி பார்த்தீவ் பட்டேலும், தோனியை தனது அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால் மும்பை அணிக்காக விளையாடிய ஜாகீர் கான் தேர்வு செய்த அணியில் தோனியை கேப்டனாக அறிவித்திருக்கிறார். தோனியின் கேப்டன்சியாலும், அதிரடி ஆட்டத்தாலும், சிஎஸ்கே அணி நடப்பு சீசனிலேயே பல போட்டிகளை வென்ற நிலையில், தோனியின் பெயரை ரெய்னா சேர்க்காதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Story first published: Sunday, May 28, 2023, 15:00 [IST]
Other articles published on May 28, 2023
English summary
Suresh raina picks hardik pandya as captain of ipl 2023 over ms dhoni தோனி முதுகில் குத்திய ரெய்னா! சிறந்த ஐபிஎல் 2023 அணியில் தோனிக்கு இடமில்லை.. கடுப்பான ரசிகர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+