
சிஎஸ்கேவில் இணைந்துள்ள ரெய்னா
ஐபிஎல் 2020 தொடரில் விளையாடாமல் முதலிலேயே வெளியேறினார் சுரேஷ் ரெய்னா. அவரது சொந்த சூழல்கள் இதற்கு காரணமாக கூறப்பட்டது. நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் சிஎஸ்கேவுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த சீசனில் அவர் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்துள்ளார்.

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு
வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் 2021 தொடர் துவங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சி போட்டிகளை கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் துவங்கியுள்ளது. இதில் கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, இளம் வீரர்கள் சிலர், இலங்கை பௌலர்கள் என அனைவரும் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் பிரச்சினை?
ஆனால் இந்த பயிற்சி போட்டியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்காதது மீண்டும் பல்வேறு யூகங்களுக்கு இடமளித்தது. மீண்டும் நிர்வாகத்துடன் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாலேயே அவர் பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று இணையத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிஇஓ அறிவிப்பு
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக தற்போது பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும் வரும் 21ம் தேதி அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சிகளில் ஈடுபடுவார் என்றும் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவர் அணியில் இணையும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications