Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கைதுக்கு மறுநாளே.. ரெய்னாவிற்கு சிஎஸ்கே அனுப்பிய செம மெசேஜ்.. மொத்தமாக முடிகிறது பிரச்சனை!

சென்னை: மூத்த வீரர் ரெய்னாவை நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த வருடமும் சிஎஸ்கே அணியில் ரெய்னா கண்டிப்பாக ஆடுவார் என்பது உறுதியாகி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டார். இரவு நேரத்தில் நைட் கிளப்பில் குடித்துவிட்டு ஆடியதாக ரெய்னா கைது செய்யயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில பாலிவுட் பிரபலங்கள், பாடகர்கள் பலர் இதில் கைது செய்யப்பட்டனர். போலீசால் ரெய்னா கைது செய்யப்பட்டாலும் சில நிமிடங்களில் பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார்.

எப்படி

எப்படி

ரெய்னாவின் இந்த கைது பெரிய அளவில் சர்ச்சையானது. கடந்த சில நாட்களாக ரெய்னா சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் போட்டியில் ரெய்னா ஆடவில்லை.

குடும்பம்

குடும்பம்

இவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காரணத்தாலும், சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலாலும் ரெய்னா இந்தியா திரும்பினார். இந்த நிலையில் அடுத்த சீசனில் ரெய்னா சென்னை அணிக்கு ஆடுவாரா என்று கேள்வி நிலவியது.

பதில்

பதில்

இவரை சிஎஸ்கே அணி நிர்வாகமே கழட்டி விட போகிறது என்றும் கூட செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மூத்த வீரர் ரெய்னாவை நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரெய்னா தொடர்ந்து அணியில் நீடிப்பார்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

அவர் கைது குறித்து செய்தியில் மட்டுமே படித்தோம். இதற்கும் ஐபிஎல்லிற்கும் தொடர்பு இல்லை. அவர் நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அடுத்த வருடமும் சிஎஸ்கே அணியில் ரெய்னா கண்டிப்பாக ஆடுவார் என்பது உறுதியாகி உள்ளது.

Story first published: Thursday, December 24, 2020, 22:22 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+