கடினமான ஆடுகளத்தில் அதிரடியாக ஆடியது எப்படி? சூர்யகுமார் சொன்ன காரணம்.. ஓஹோ விஷயம் அப்படியா?
சிட்னி: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்துக்கு 180 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற ரோகித் சர்மா, முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோதித் சர்மா, அரைசதம் விளாசினார். கோலி தொடர்ந்து 2வது முறையாக அரைசதம் கடந்தார்.

ஆடுகளம்
சூரியகுமார் 25 பந்தில் 51 ரன்கள் விளாச இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இந்தியா விளையாடிய அதே சிட்னி ஆடுகளத்தில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் விளையாடியதால், ஆடுகளம் தொய்வாக காணப்பட்டது. பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை.

அரைசதம்
இதனால், இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் தடுமாறினாலும், சூர்யகுமார் மட்டும் அதிரடியாக விளையாடி 7 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 25 பந்திலேயே அரைசதம் கடந்தார். இது குறித்து இன்னிங்ஸ் முடிந்த உடன் பேசிய சூர்யகுமார் யாதவ், ஆடுகளத்தில் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை.

கோலியின் அறிவுரை
ஆனால், நான் களத்துக்கு வந்த உடனே விராட் கோலி, ஆடுகளத்தை பற்றி கவலைப்படாதே.. நீ வழக்கம் போல் உன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து என்று கூறினார் கோலி கொடுத்த அறிவுரையால், நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடினேன். மேலும் என் மனைவி மைதானத்திற்கு வந்து இருக்கிறார்.

காரணம் இது தான்
என் மனைவி முன் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நெதர்லாந்தை வீழ்த்த இந்த இலக்கு போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன். விராட் கோலியோடு விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் ஒவ்வொரு போட்டிக்காகவும் கடும் பயிற்சி மேற்கொள்கிறார் என்று சூர்யகுமார் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications