Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியுடன் மோதல்.. தேவையின்றி மீண்டும் கிளறும் சூர்ய குமார் யாதவ்.. என்ன இப்ப போய் இப்படி பேசுறார்!

சென்னை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மும்பை வீரர் சூர்ய குமார் யாதாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்த கொண்டு இருக்கிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் 5 டி 20 போட்டிகள் இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது சூர்ய குமார் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சூர்ய குமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இவர் புறக்கணிக்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து தற்போது சூர்ய குமார் யாதவ் பேட்டி அளித்துள்ளார். அதில், ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்காத போது அது மனரீதியாக பெரிய அளவில் அழுத்தத்தை கொடுத்தது. அதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது.

சொல்லாமல் சென்றுவிட்டேன்

சொல்லாமல் சென்றுவிட்டேன்

யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டே கிளம்பிவிட்டேன். மும்பை பீச்சில் கொஞ்ச நேரம் நடந்தேன். அப்போது ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டிகள் நடந்து கொண்டு இருந்தது. இதனால் அந்த போட்டிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.

கவலை

கவலை

இதற்காக என்னுடைய கவலைகள் மீது கவனம் செலுத்தாமல் ஐபிஎல் போட்டிகள் மீது கவனம் செலுத்தினேன். அதன்பின் மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றேன். அங்கு எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினார்கள்.

நன்றாக ஆடுங்கள்

நன்றாக ஆடுங்கள்

தொடர்ந்து நன்றாக ஆடுங்கள். உங்கள் ஆட்டம் மீது கவனம் செலுத்துங்கள். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு அறிவுரை வழங்கினார்கள். இதனால் ஆட்டம் மீது கவனம் செலுத்தினேன். இப்போது எனக்கான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று சூர்ய குமார் யாதவ் குறிப்பிட்டு இருக்கிறார்.

 வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

ஆஸ்திரேலிய தொடரில் சூர்ய குமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கோலிக்கும் இவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழைய மோதலை இவர் நினைவு கூர்ந்து இருப்பது பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Tuesday, February 23, 2021, 8:49 [IST]
Other articles published on Feb 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+