Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகும் சூர்யகுமார் யாதவ்.. 2028ல் கம்பீருடன் மீண்டும் இணைய வாய்ப்பு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகி, மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து கவுதம் கம்பீருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கணித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்வது கூட சரி ஆனால் எப்படி கம்பீருடன் இணைவார்? என்ற கேள்விக்கும் உத்தப்பா ஒரு பதில் வைத்துள்ளார்.

இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டனான சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர், கேப்டன் பதவியையும் இழந்தார்.

Suryakumar Yadav to Leave Mumbai Indians Robin Uthappa Predicts Reunion with Gambhir in KKR by 2028

அத்துடன் ஐபிஎல் 2026 தொடரிலும் அவர் மோசமாக விளையாடினார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருமுறை 'அன்ஃபாலோ' செய்தது, அவர் அணியில் இருந்து விலக உள்ளதாக வதந்திகளைக் கிளப்பியது.

இது குறித்து யூடியூப் நேர்காணலில் ராபின் உத்தப்பா பேசுகையில், "சூர்யகுமார் யாதவ் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு கவுதம் கம்பீரின் இந்திய அணி பயிற்சியாளர் காலம் முடிவுக்கு வரும். அதன் பின்னர் அவர் மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராகவோ அல்லது பயிற்சியாளராகவோ இணைய வாய்ப்புள்ளது. அப்போது சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும், கம்பீர் ஆலோசகராகவும் புதிய கூட்டணியை அமைப்பார்கள்" என்றார் .

கடந்த ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே மற்றும் துணை கேப்டன் ரிங்கு சிங் ஆகியோர் சோபிக்கத் தவறினர். இதனால், 2028 மெகா ஏலத்திற்கு முன்னதாக அனுபவமிக்க சூர்யகுமாரை கேப்டனாக்க கொல்கத்தா நிர்வாகம் விரும்பலாம் .

IND vs AFG: ரோஹித் சர்மாவுக்கு காயம்.. இந்த ஓப்பனருக்கு வாய்ப்பா? இந்திய பிளேயிங் 11-இல் மாற்றம்?

IND vs AFG: ரோஹித் சர்மாவுக்கு காயம்.. இந்த ஓப்பனருக்கு வாய்ப்பா? இந்திய பிளேயிங் 11-இல் மாற்றம்?

சூர்யகுமார் யாதவ் குறித்து உத்தப்பா மேலும் கூறுகையில், "அவர் 40 வயது வரை ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். ஆனால், அவரது வயதின் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 2028 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் நுழைவது கடினம்" என்று கூறினார். முன்னதாக 2014 முதல் 2017 வரை கம்பீரின் தலைமையிலான கொல்கத்தா அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடி இருந்தார். அப்போது அவர் துணை கேப்டனாகப் பொறுப்பு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 17, 2026, 9:06 [IST]
Other articles published on Jun 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+