Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி வீரரை களமிறக்கும் ஆர்.சி.பி.... விராட்டின் தீவிர பக்தர் வேற... என்ன நடக்கிறது ஐபிஎல்-ல்..!

சென்னை: சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடி காட்டிய இளம் வீரருக்கு வாய்ப்பளித்துள்ளது பெங்களூரு அணி.

14வது ஐபிஎல் தொடரின் ஏலம் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரர்களே ஏலம் போகாத சூழலில் இளம் வீரர்கள் கவனம் ஈர்த்துள்ளனர்.

அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் வாய்ப்பு தேடி காத்திருந்த இளம் வீரருக்கு பெங்களூரு அணி வாய்ப்பளித்துள்ளது.

அசாருதீன்

அசாருதீன்

கேரளா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் முகமது அசாருதீன். சஞ்சு சாம்சனின் சக வீரரான இவர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டக் கோப்பையில் மும்பைக்கு எதிராக 54 பந்துகளில் 137 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஏலம்

ஏலம்

26 வயதாகும் அசாருதீனை ஐபிஎல் போட்டியில் ஏலம் எடுக்க நிச்சயம் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரின் ஆரம்ப விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததுள்ளது.

ஆசை

ஆசை

ஏலம் எடுக்கப்பட்டுள்ள அசாருதீன், விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். சமீபத்தில் பத்திரிகைகளில் பேட்டியளித்திருந்த முகமது அசாருதீன் இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து ஆட வேண்டும் என ஆசை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அணி வீரர்கள்

அணி வீரர்கள்

இன்று நடைபெற்ற ஏலத்தில் பெங்களூரு அணி மேக்ஸ்வெல்-ஐ ரூ.14.25 கோடி, சச்சின் பேபி - ரூ.20 லட்சம், ராஜாட் பட்டிதார் - ரூ.20 லட்சம், முகமது அசாரூதின் 20 லட்சம், கெயில் ஜெமின்சன் ரூ.15 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது.

Story first published: Friday, February 19, 2021, 8:26 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+