Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் கிரிக்கெட் - மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா!

மிர்புர்: வங்க தேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்யின் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்திய அணி.

5வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்க தேசத்தில் நடந்து வருகிறது. மிர்புரில் இன்று நடந்த லீக் போட்டியில் 'பிரிவு-2' ல் இடம் பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

T 20 - India won West Indies

'டாஸ்' வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்திய அணிக்கு டேரன் ஸ்மித், கெய்ல் ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. 11 ரன்களை மட்டுமே எடுத்த ஸ்மித் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதையடுத்து 34 ரன்கள் விளாசிய கெய்ல் வெளியேறினார்.

பின்னர் மிஸ்ராவின் சுழலில் சாமுவேல்ஸ் (18), பிராவோ (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் சமி (11) ரசல் (7) வெளியேற சிம்மன்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய அணி 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.

எடுத்த எடுப்பில் சாமுவேல் பத்ரியின் பந்துவீச்சில் ஷிகார் தவான் டக்-அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கோஹ்லி 54 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 10 ரன்கள் சேர்த்திருந்தபோது அவுட்டானார்.

இறுதியாக சுரேஷ் ரெய்னாவும், ரோகித் ஷர்மாவும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 19.4 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்:

மேற்கிந்திய தீவுகள்: 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129

கெய்ல் 34, சிம்மன்ஸ் 27

பந்து வீச்சு: ரெய்னா 2

இந்தியா

19.3 ஓவர்களில் 130

ரோகித் ஷர்மா 62
கோஹ்லி 54

Story first published: Monday, March 24, 2014, 12:08 [IST]
Other articles published on Mar 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+