Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்ஸ் டீம்ல ஜாய்ன் ஆயிட்டாரு யார்க்கர் கிங்... சிறப்பான சம்பவத்துக்கு தயாரா இருக்காராம்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடர் வரும் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி ஒருசிலர் தவிர்த்து அனைத்து வீரர்களும் தங்களது அணிகளில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் யார்க்கர் கிங் அந்த அணியில் இணைந்துள்ளார்.

சிறப்பான கவனம்

சிறப்பான கவனம்

கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான தொடர்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார் தமிழக வீரர் டி நடராஜன். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் இறுதி ஓவரை போட்டு, இங்கிலாந்தை முறியடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

குவாரன்டைனில் வீரர்கள்

குவாரன்டைனில் வீரர்கள்

இங்கிலாந்து தொடரின் பயோ பப்ளில் இருந்து நேரிடையாக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டால், குவாரன்டைனில் ஈடுபட வேண்டியதில்லை என்றும் அதை ப்ரேக் செய்தால் 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுவது கட்டாயம் என்றும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் ஐபிஎல் வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அணியில் இணைந்த நடராஜன்

அணியில் இணைந்த நடராஜன்

இந்நிலையில் ஒருநாள் தொடரையடுத்து தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்ட நடராஜன், சென்னையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இதையடுத்து அவர் 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டு பின்பு பயிற்சிகளிலும் தொடர்ந்து போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக எஸ்ஆர்எச் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

11ம் தேதி போட்டி

11ம் தேதி போட்டி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சென்னையில் வரும் 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தனது முதல் ஐபிஎல் போட்டியை விளையாடவுள்ளது. மேலும் முதல் கட்ட போட்டிகளை சென்னையில் விளையாடவுள்ளதையடுத்து தற்போது சென்னையில் அந்த அணி முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 2, 2021, 11:04 [IST]
Other articles published on Apr 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+