For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH அணியில் களமிறங்கிய தமிழக சிங்கம்.. இனி வேட்டை காத்திருக்கு.. அவமானப்பட்ட சாம்சன் பதிலடி தருவாரா

ஐதராபாத் : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு லீக் தொடரில் இன்று சூப்பர் சண்டே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தை போல் இன்றும் 2 பிளாக்பஸ்டர் ஆட்டங்கள் காத்து இருக்கின்றன. ஐதராபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்ஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் ஏய்டன் மாக்கரம் இல்லாததால் புவனேஸ்வர் குமார் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார் இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்ஹச் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால், எவ்வளவு ரன் அடித்தாலும் சேஸிங் செய்ய முடியும்.

 T Natrajan is Back in IPL Games - Will Sanju outperform SRH

இதனால் புவனேஸ்வர் குமார் பந்துவீசுவதாக அறிவித்தார். கேப்டனாக ஒரு போட்டியில் தான் செயல்படுவதால் தமக்கு அழுத்தம் கொஞ்சம் குறைவு என்று காமெடியாக பதில் சொன்னார். இந்த தொடர் சஞ்சு சாம்சனுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்ச்ன் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவரால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு தற்போது முதல் முறையாக சஞ்சு சாம்சன் பெரிய தொடரில் விளையாடுகிறார். இதே போன்று ஜாஸ் பட்லர், கடந்த முறை சதங்களாக அடித்து தள்ளிய நிலையில், இம்முறையும் பட்டாசை கொளுத்துவார் என எதிர்ப்பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் பிளேயிங் லெவன், 1, அபிசேக் சர்மா, 2, மாயங் அகர்வால் 3, ராகுல் திரிபாதி , 4, ஹாரி புருக், 5, கிளன் பிளிப்ஸ், 6, வாசிங்டன் சுந்தர், 7, புவனேஸ்வர் குமார், 8 ஆதில் ரஷித், 9, ஃபரூக்கி, 10, உம்ரான் மாலிக், 11, நடராஜன்

ராஜஸ்தான் பிளேயிங் லெவன் 1 பட்லர், 2, ஜெய்ஷ்வால் 3, படிக்கல், 4, சஞ்சு சாம்சன், 5, ரியான் பராக், 6, ஷிம்ரன் ஹேட்மயர், 7, ஜேசன் ஹோல்டர், 8, அஸ்வின், 9, சாஹல், 10, பௌல்ட், 11 ஆசிஃப்

Story first published: Sunday, April 2, 2023, 15:29 [IST]
Other articles published on Apr 2, 2023
English summary
T Natrajan is Back in IPL Games - Will Sanju outperform SRH SRH அணியில் களமிறங்கிய தமிழக சிங்கம்.. இனி வேட்டை காத்திருக்கு.. அவமானப்பட்ட சாம்சன் பதிலடி தருவாரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+