அஸ்வினின் இடத்திற்கே சிக்கல்.. நெதர்லாந்து அணியுடனான போட்டியில் அதிரடி மாற்றம்.. யாருக்கு வாய்ப்பு??
சிட்னி: நெதர்லாந்து அணியுடனான மோதலுக்காக இந்திய அணியில் 3 வீரர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்று அசத்தியது. பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து இந்திய அணி தனது 2வது போட்டியில் நாளை நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

2வது லீக் போட்டி
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 26 ) நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியளவில் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை வீழ்த்திய புத்துணர்ச்சியில் இருக்கும் இந்தியா, இந்த போட்டியிலும் வெற்றி கண்டால் அடுத்த சுற்றுக்கு செல்வது சுலபமாகும்.

முக்கிய வீரர் வரலாம்
இந்நிலையில் அதற்காக ஒரே ஒரு முக்கிய மாற்றத்தை செய்யவுள்ளனர். மெல்பேர்ன் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த சூழலில் சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பயன் தரும். அதுவும் ரன்களை கட்டுப்படுத்த அல்ல, விக்கெட்களை வீழ்த்தும் அளவிற்கு பிட்ச்-ல் ஸ்பின்னர்கள் பயன்பெறுவார்கள். எனவே இதற்காக யுவேந்திர சாஹலை மீண்டும் அணிக்குள் கொண்டு வர ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார்.

இந்திய அணி முடிவு
நெதர்லாந்து அணியை சமாளிப்பது சுலபமான ஒன்று தான் என்பதால் ஆளமான பேட்டிங் வரிசையை இந்தியா விரும்பவில்லை. கடந்த போட்டியில் அக்ஷர் பட்டேல் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினார். எனவே அவரை நீக்கிவிட்டு சாஹல் சேர்க்கப்படலாம். லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கூட உதவுவார்.

இடதுகை வீரரின் உதவி
மற்றொரு புறம் இந்திய அணிக்கு இடதுகை பேட்ஸ்மேனின் தேவை இருப்பதால் அக்ஷர் பட்டேலை வைத்துக்கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கிவிடலாம். ஏற்கனவே அக்ஷர் பட்டேல் மற்றும் யுவேந்திர சாஹல் ஜோடி களக்கியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் ப்ளேயிங் 11ல் முயற்சித்து பார்க்கலாம். இது தென்னாப்பிரிக்க போட்டிக்கு தயாராவதற்கு உதவும். எது எப்படி இருந்தாலும் அஸ்வின், அக்ஷர், சாஹல் ஆகியோர் இடையே மும்முணை போட்டி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications