
இந்தியாவின் பலம்
இந்திய கிரிக்கெட் அணியின் பலம் என்றாலே, அது பேட்டிங் தான். கடந்த முறை போல இல்லாமல், இம்முறை அனைத்து வீரர்களும் டாப் ஃபார்மில் உள்ளனர். ரோகித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என மிரட்டலான பேட்டிங் வரிசை உள்ளது. இதே போன்று அதிரடி ஆட்டத்தை இந்தியா கையில் எடுத்திருப்பதும் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பலவீனம்
இந்திய கிரிக்கெட் அணியின் பலவீனம் என்றாலே அது கடைசி கட்ட பந்துவீச்சு தான். டெத் பவுலிங்கை மட்டும் இந்தியா சரி செய்துவிட்டால் பிரச்சினை இருக்காது. இந்த இடத்தில் தான் பும்ராவை இந்தியா மிஸ் செய்யும். இதே போன்று அனுபவ வீரரான புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல் ஆகியோர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

ஃபில்டிங் குறை
இந்திய கிரிக்கெட் அணியில் ஃபில்டிங் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் சிக்சர் அடிக்க முயற்சித்து கேட்சாகும் வாய்ப்பு அதிகம். இதனால், கேட்ச்களை பிடித்தால் மேட்சை வெல்லலாம். கேட்சை பிடிக்கவில்லை என்றால் கூட, பந்தை சிக்சருக்கு விட்டு விடக்கூடாது. இதே போன்று பெரிய மைதானம் என்பதால், எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் ஓட முயற்சி செய்வார்கள். இதனால் ரன் அவுட் வாய்ப்பையும் விட கூடாது.

இந்தியா ஆட்டங்கள்
அக், 23 இந்தியா Vs பாகிஸ்தான் நேரம் நேரம்- மதியம் 1.30
அக்.27 இந்தியா Vs ரன்னர் அப் குரூப் ஏ நேரம் -மதியம் 12.30
அக்.30 இந்தியா Vs தென்னாப்பிரிக்கா நேரம்-மாலை 4.30
நவ. 2 இந்தியா Vs வங்கதேசம் நேரம்- மதியம் 1.30
நவ. 6 இந்தியா Vs வின்னர் குரூப் பி நேரம்- மதியம் 1.30

இந்திய அணி விவரம்
ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் , ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ,தீபக் ஹூடா, அஸ்வின் ,சாஹல், ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி
ரிசர்வ் வீரர்கள் - முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னாய்


Click it and Unblock the Notifications