Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இப்ப வாங்கயா பார்ப்போம்” சாஹீனை சமாளிக்க டிராவிட் தரும் புதுவித பயிற்சி..வெளுத்து வாங்கும் ரோகித்!

மெல்பேர்ன்: இந்தியாவின் நீண்ட கால பிரச்சினையை தீர்க்க ரோகித் சர்மாவுக்கு புதுவிதமான ஸ்பெஷல் பயிற்சியை ராகுல் டிராவிட் கொடுத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியே பெறாமல் இருந்த இந்திய அணி கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதே போல ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுடனான தோல்வி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. எனவே இந்த முறை அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும் என ரோகித் சர்மாவின் படை களமிறங்கவுள்ளது. ஆனால் அதில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் கண்டமாக உள்ளது. கடந்தாண்டு சாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கில் இந்தியாவின் டாப் 3 வீரர்கள் சரிந்தனர். சாம்பியன்ஸ் டிராபியில் முகமது அமீரிடம் இந்திய வீரர்கள் சொதப்பினர். இதே போல 2019ம் ஆண்டு ட்ரெண்ட் போல்ட்-டிம் பவர் ப்ளேவில் நல்ல அடி வாங்கியிருந்தனர். இதனால் இந்தாண்டு எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

இந்நிலையில் சாஹீனை சமாளிக்க ரோகித் சர்மாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து வருகிறார் ராகுல் டிராவிட். வலைப்பயிற்சியில் ரோகித் சர்மாவுக்கு த்ரோ டவுன் பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதில் இடதுகை யில் வீசப்பட்டு, அதன் வேகத்தை ரோகித் கணிக்க கற்றுக்கொண்டு வருகிறார். இதன் மூலம் சாஹீன் நேராக வீசினாலும் சரி, ரவுண்ட் தி விக்கெட்டில் வீசினாலும் சரி ரோகித்தால் சமாளிக்க முடியும். கே.எல்.ராகுலுக்கும் இதே போன்ற பயிற்சி தான் கொடுத்து வருகின்றனர்.

 பலமான அணி

பலமான அணி

பிரிஸ்பேனில் பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வந்த இந்திய அணி, மெல்பேர்ன் - க்கு சென்றடைந்துவிட்டது. இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு நல்ல ரெக்கார்ட் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமாக இருப்பதால் 200 வரை ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பவுலிங் மற்றும் சற்று கவலைக்கிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 21, 2022, 9:53 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+