“அதை ஏன் கவனிக்க மாட்டேங்குறீங்க” தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் போட்டி.. ரவிசாஸ்திரி முக்கிய யோசனை
அடிலெய்ட்: இங்கிலாந்து அணியை எதிர்ப்பதற்கு ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யார் தேவை என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரையிறுதி சுற்றுகள் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறும் 2வது போட்டியில் இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த தொடரில் இதுவரை அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ப்ளேயிங் 11 தேர்வு
இதற்காக ப்ளேயிங் 11 தேர்வில் ரோகித் சர்மா தீவிர ஆலோசனையை நடத்தி வருகின்றார். இதில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகியோர் போட்டி தான் முக்கிய விவாதமாக உள்ளது. தொடக்கத்தில் இருந்தே வாய்ப்பு பெற்று வரும் தினேஷ் கார்த்திக் 4 போட்டிகளில் வெறும் 14 ரன்களை மட்டும் தான் அடித்துள்ளார். ரிஷப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்பில் 3 ரன்களுக்கு நடையை கட்டி ஏமாற்றினார்.

ரவிசாஸ்திரி தந்த யோசனை
இதனால் முக்கியமான அரையிறுதிப்போட்டியில் யாருக்கு வாய்ப்பு என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி யோசனை கூறியுள்ளார். அதில், தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர் ஆவார். ஆனால் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் என வரும் போது அவர்களின் பவுலிங் அட்டாக்கை சமாளிக்க ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தான் கண்டிப்பாக தேவை.

என்ன காரணம்
ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார். தனி ஒருநாளாக வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்திய அணிக்கு அவர் தான் திருப்புமுணையாக இருப்பார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக வலதுகை பேட்டர்களுடன் சென்றால் சுலபமாக வியூகம் வகுத்துவிடுவார்கள்.இதுவே ஒரு இடதுகை வீரர் இருந்தால் வியூகத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அது நமக்கு சாதகமாக இருக்கும்.

மற்றொரு காரணம்?
போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானத்தில் குறைந்த தூரம் கொண்ட பவுண்டரிகள் ஸ்கெயர் திசையில் தான் உள்ளது. அப்போது பண்ட் தான் அடிக்க முடியும். இதே போல டாப் ஆர்டரில் வெகு சீக்கிரமாக விக்கெட்கள் விழுந்துவிட்டால், மிடில் ஆர்டரில் இடதுகை - வலதுகை பார்ட்னர்ஷிப் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய உதவியாக இருக்கும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications